ஊட்டி மலைப்பாதையில் வாகனங்களை மறித்த காட்டு யானை
2022-05-27@ 00:08:11

கோத்தகிரி: மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பாதையில் காட்டு யானை வாகனங்களை மறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள முள்ளூர், மாமரம், குஞ்சப்பனை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பலாப்பழம் சீசன் என்பதால் காட்டு யானை கூட்டம் தோட்டங்களில் முகாமிட்டுள்ளன. அந்த யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது அங்குள்ள சாலைகளில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி நோக்கி வந்து கொண்டிருந்த காரை சாலை ஓரத்தில் நின்றிருந்த காட்டு யானை திடீரென வழிமறித்தது. இந்த காட்சியை அவ்வழியாக சென்ற மற்றொரு வாகன ஓட்டி தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இக்காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எனவே இரவு நேரங்களில் மலைப்பாதையில் செல்வோர் கவனமுடன் பயணிக்க வேண்டும் என வனத்துறையினர், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
பட்டதாரி பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு மாஜி எம்எல்ஏவின் மகனுக்கு போலீஸ் வலை
கரூர் திருமாநிலையூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள தனிவிமானம் மூலம் திருச்சி புறப்பட்டார் முதல்வர் முக.ஸ்டாலின்
சாத்தான்குளம் அருகே விஷம் வைத்து 20 கோழிகள் சாகடிப்பு
பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து திருவேங்கடத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
ராஜபாளையம் தொகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
காட்பாடியில் சீரமைப்பு பணி முடிந்தது ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து தொடக்கம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்