தமிழ்நாட்டில் 10 மாதங்களில் அனைத்து கிராமங்களிலும் இணையதள சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி
2022-05-27@ 00:07:31

நாகர்கோவில்: தமிழ்நாட்டில் இன்னும் 10 மாதங்களில் அனைத்து கிராமங்களிலும் இணையதள வசதி கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 20 ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வாகனங்களை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் இன்னும் 10 மாத காலத்தில் அனைத்து கிராமங்களுக்கும் இணையதள சேவை வழங்கப்பட்டு விடும். மொத்தம் 4 கட்டங்களாக இந்தப் பணிகள் நடைபெறுகிறது. ஏற்கனவே மூன்று கட்ட பணிகள் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் நான்காவது கட்ட பணிக்கான ஒப்பந்தம் மே 27 ம் தேதி (இன்று) பிற்பகலில் கையெழுத்தாக உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் இன்னும் ஒருசில தினங்களில் இந்தப் பணியைத் தொடங்கி வைக்க இருக்கிறார். அடுத்த பத்து மாத காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இணையதள சேவை கிடைக்கும். இதன்மூலம் 12 ஆயிரத்து 525 ஊராட்சி பகுதிகள் முழுமையாக இந்த திட்டத்தில் பயன்பெறும். நாகர்கோவில் அருகே கோணம் என்ற இடத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:
In Tamil Nadu 10 months All Village Internet Service Minister Mano Thankaraj தமிழ்நாட்டில் 10 மாத அனைத்து கிராமம் இணையதள சேவை அமைச்சர் மனோ தங்கராஜ்மேலும் செய்திகள்
பட்டதாரி பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு மாஜி எம்எல்ஏவின் மகனுக்கு போலீஸ் வலை
கரூர் திருமாநிலையூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள தனிவிமானம் மூலம் திருச்சி புறப்பட்டார் முதல்வர் முக.ஸ்டாலின்
சாத்தான்குளம் அருகே விஷம் வைத்து 20 கோழிகள் சாகடிப்பு
பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து திருவேங்கடத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
ராஜபாளையம் தொகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
காட்பாடியில் சீரமைப்பு பணி முடிந்தது ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து தொடக்கம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்