SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேனி அணியை சேர்ந்த மாஜி மந்திரியை ஓரங்கட்டி கெத்து காட்டிய சேலம் அணியின் தந்திரத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2022-05-25@ 00:55:01

‘‘விழுப்புரம் மாஜி மந்திரியை டம்மியாக்கும் முயற்சியில் தேனிக்காரரின் கை ஓங்கி இருக்காமே, அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் கடந்த தேர்தலில் உள்ளடி வேலைப் பார்த்ததாக பட்டியல் போட்டு முக்கிய நிர்வாகிகளை இலையின் இரட்டையர்கள் நீக்கிட்டாங்க. அப்படிதான், செஞ்சி தொகுதியில் கொக்கரகோவையும் தூக்கினாங்க. இதற்கு விழுப்புரத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் தான் காரணமாம். இதனால், பகை அதிகரித்து மாஜிக்கு எதிராக கொக்கரக்கோ தரப்பு அரசியல் நடத்தி வந்ததாம். அப்போதுதான் செஞ்சிக்கு வந்த தேனிக்காரரை பார்த்தவுடன் கொக்கரக்கோ அவருக்கு சால்வை அணிவித்து இணக்கமாகிவிட்டார். உங்கள் மீது பல பெட்டிஷன்கள் வந்தது. இனி நீங்கள் என் அணி. கட்சி பிரச்னையை நான் பார்த்து கொள்கிறேன். நீங்கள் பயப்படாமல் இருங்க என்று கூறிவிட்டு தேனிக்காரர் சென்றுவிட்டாராம். அருகிலிருந்த மாஜி அமைச்சரோ இந்நிகழ்வை பார்த்து ஓரம் ஒதுங்கி சென்றாராம். மாஜி அமைச்சருக்கு எதிராக, நேருக்கு நேர் மோத யாரும் இல்லாத நிலையில், தற்போது சேவல் கொக்கரக்கோ என்று ஓவராக கூவ ஆரம்பித்துவிட்டதாம். அவரை வைத்து காய் நகர்த்த தேனிக்காரர் முடிவு செய்துள்ளாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாங்கனி மாவட்டத்துல ஏன் இன்ஜினியர்கள் அதிர்ச்சியில இருக்காங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி கார்ப்பரேஷன்ல பொறியியல் பிரிவு, சுகாதாரப் பிரிவு, நகரமைப்பு பிரிவுல 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வர்றாங்க. பல ஆண்டாக ஒரே கார்ப்பரேஷன்ல வேலை செய்து வரும் அதிகாரிகளை, மற்ற கார்ப்பரேஷனுக்கு டிரான்ஸ்பர் செய்யலாம்னு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளாங்களாம். இதுல மாங்கனி கார்ப்பரேஷன்ல பொறியியல் பிரிவில் பல ஆண்டுகளாக வேலை செய்து வரும் இன்ஜினியர்களின் பட்டியல எடுத்துட்டாங்க. அந்த லிஸ்ட்ல மாங்கனி இலைக்கட்சி விவிஐபியுடன் நெருக்கமாக இருந்தவர்களின் பெயர்களையும் ஸ்பெஷலா எடுத்து சேர்த்திருக்காங்க. இந்த பட்டியல சென்னைக்கும் அனுப்பி வச்சுட்டாங்க. எப்ப வேண்டுமானாலும் டிரான்ஸ்பர் வரலாம்னு மாங்கனி கார்ப்பரேஷன் ஊழியர்கள் மத்தியில ஒரே பேச்சா இருந்து வருதாம்... இதனால போன ஆட்சியில விவிஐபியுடன் நெருக்கமா இருந்த அதிகாரிகள் கலக்கமடைஞ்சிருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘லஞ்சம் பெற்றுவிட்டு ஓய்வு பெற்றால் வழக்கில் இருந்து தப்பிக்க முடியுமா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பூட்டு மாவட்டத்தில் உள்ள 5 பேரூராட்சிகளில் செயல் அலுவலராக பணியாற்றியவர் கடவுள் என முடியும் பெயர் கொண்டவர். இலைக்கட்சி ஆதரவாளரான இவர், இம்மாவட்டத்தில் ஊர் பெயரில் துவங்கும் மாஜி அமைச்சரின் தீவிர விசுவாசி. இலைக்கட்சி காலத்தில் இவர் பணியாற்றியபோது, மாவட்டத்தின் அனைத்து பேரூராட்சிகளுக்கும் மின்சாதனங்கள் சப்ளை செய்வது, ஒப்பந்த பணிகள் எடுப்பது மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு கந்துவட்டி கொடுப்பது என பலதரப்பட்ட பணிகளைச் செய்து, பெரும் வருவாய் பார்த்து வந்தாராம். ஆட்சி மாற்றத்தால் நடவடிக்கை பாயும் என்ற அச்சத்தில் திடீரென விருப்ப ஓய்வு பெற்றார். இவர் வேலை பார்த்த பேரூராட்சிகளில் ஒப்பந்த பணிகளை முறையாக செய்யாததால் அதற்கான பில்களை செட்டில் செய்யவில்லை. இதனால் பல்வேறு பேரூராட்சிகளில் பணம் தராமல் உள்ளனர். குறிப்பாக கோட்டை, பட்டி என முடியும் பேரூராட்சிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இப்போதும் இலைக்கட்சி காலத்தில் இருந்த ஆதரவு ஊழியர்கள் துணையோடு, அலுவலகத்தில் இருக்கும் ஆவணங்களைச் சேகரித்து, பேரூராட்சி இயக்குநருக்கு மொட்டைக் கடிதங்களை அனுப்பி வைத்து வருவதாகவும், இதன்பேரில் விசாரித்து இந்த இலைக்கட்சி ஆதரவுக்காரர் மீதான நடவடிக்கையை வேகப்படுத்த வேண்டுமெனவும் அலுவலகப் பணியாளர்கள் குரல் ஓங்கி ஒலிக்கிறது....’’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தரையில உட்கார வைச்சுட்டாங்களே என்று மாஜி மந்திரி வருத்தப்பட்டாராமே, அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள திடலில் இலை கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. விழாவிற்காக, ‘‘அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் தேனிக்காரர் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சரான ‘மில்க்’ என முடியும் நபரின் பெயரை சேர்க்கவில்லையாம். முக்கியமாக,‘இலை கட்சியின் மாஜி அமைச்சரை மேடையில் அமர விடாமல்,‘தொண்டர்கள் அமர்ந்திருந்த வரிசையில் உட்கார வைத்தார்களாம். தொடர்ந்து,‘தன்னை சேலத்துக்காரர் அணி புறக்கணித்து வருவதாக, ‘மாஜி அமைச்சர் தேனிக்காரரிடம் சொல்லி வந்த நிலையில், ‘தற்போது அவரை டம்மியாக்கும் முயற்சியில் சேலத்துக்காரர் அணி இறங்கியுள்ளதாம். மேலும், ‘கூட்டத்தில் பேசிய சேலத்துக்காரரின் அணியை சேர்ந்தவர்கள், ‘மறந்தும் கூட மாஜி அமைச்சரின் பெயரை உச்சரிக்கவில்லையாம்’. இதனால் தேனிக்காரர் அணியை சேர்ந்த தொண்டர்கள் கடும் விரக்தியில் இருக்காங்களாம். கடலோர மாவட்டத்தில்,‘ தேனிக்காரரின் டீமை டம்மியாக்கும் முயற்சியில் சேலத்துக்காரர் அணியினர் இறங்கி அடித்து கெத்து காட்டியதாக பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.   

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tailllo111

  நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

 • glass-park-29

  ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

 • asaam_rain

  அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

 • tour-28

  ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்