எந்த நாட்டின் முதலீடுகள் வந்தாலும் மோடியின் நண்பர்களுக்குதான் பயன்: திருமாவளவன் எம்பி குற்றச்சாட்டு
2022-05-25@ 00:51:04

தூத்துக்குடி: எந்த நாட்டில் இருந்து அந்நிய முதலீட்டை இந்தியாவுக்கு கொண்டு வந்தாலும் அது மக்களின் நலனுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் அமையாது. மோடியின் நண்பர்களுக்குத்தான் அது பயன்தரும் என்று திருமாவளவன் எம்பி குற்றம் சாட்டினார். தூத்துக்குடியில் விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்பி நேற்று அளித்த பேட்டி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழங்கில் சிபிஐ விசாரணை அறிக்கை மக்களுக்கு நீதி வழங்காது என்பதால் தமிழக அரசு மீண்டும் அதை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும். தமிழக பாஜ, அரசியல் செய்யும் களத்தை தேடுகிறது. பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை ஏற்றத்துக்கு முழு பொறுப்பு ஒன்றிய அரசுதான். கலால் வரி வசூலிப்பது ஒன்றிய அரசுதான். 200 சதவிகிதம் உயர்த்திவிட்டு மிக சொற்பமான முறையில் குறைத்து விட்டு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து விட்டதாக மக்களை பாஜ ஏமாற்றி வருகிறது. தமிழக அரசு ஏற்கனவே 3 ரூபாய் வரை வரி குறைத்து உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ச்சி பெறுவதற்கு மோடி அரசின் பொருளாதார கொள்கை வழிவகுக்கிறது. எந்த நாட்டில் இருந்து அந்நிய முதலீட்டை இந்தியாவுக்கு கொண்டு வந்தாலும் அது மக்களின் நலனிற்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் அமையாது. மோடியின் நண்பர்களுக்குத்தான் அது பயன்தரும் என்றார்.
மேலும் செய்திகள்
தலைமை கழகத்தை கைப்பேற்றுவேன் என சசிகலா பேச்சு எதிரொலி; அதிமுக அலுவலகத்தில் பாதுகாப்புக்காக ஏராளமானோர் குவிப்பு: குத்தாட்டம் போடும் வீடியோவால் பரபரப்பு
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் ஈபிஎஸ்க்கு சரமாரி கேள்வி: பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
ஐ.சி.யு.,வில் இருக்கும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கடும் தாக்கு
தேமுதிக உட்கட்சி அமைப்பு தேர்தல்: விஜயகாந்த் அறிவிப்பு
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் இன்று விசாரணை உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய வேண்டும்: ஓபிஎஸ் தரப்புக்கு ஐகோர்ட் உத்தரவு
அண்ணாமலை உருண்டு புரண்டாலும் பாஜ மீதான மக்கள் கோபம் குறையாது: கே.எஸ்.அழகிரி அறிக்கை
ஆச்சரியம்..!: அமெரிக்காவில் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய வானம்..!!
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..