உலகம் முழுவதும் 10 கோடி பேர் அகதிகளாகினர்: ஐநா அதிர்ச்சி தகவல்
2022-05-24@ 00:04:53

பெர்லின்: வரலாற்றில் முதல் முறையாக, உலகளவில் அகதிகளின் எண்ணிக்கை 10 கோடி ஆக அதிகரித்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.இதுகுறித்து, ஐநாவின் அகதிகளுக்கான ஆணையர் பிலிப்போ கிராண்டி கூறுகையில், ‘‘எத்தியோப்பியா, பர்கினோ பாசோ, மியான்மர், நைஜீரியா, ஆப்கானிஸ்தான், காங்கோ நாடுகளில் ஏற்பட்ட வன்முறை, குழுக்களிடையேயான மோதல்களால் கடந்த ஆண்டு இறுதியில் உலகளவில் அகதிகள் எண்ணிக்கை 9 கோடி என இருந்தது. தற்போது, உக்ரைனில் நடந்து வரும் போரால் இதுவரை இல்லாத அளவில் 10 கோடி ஆக அதிகரித்துள்ளது.
10 கோடி என்பது உலக மக்கள் தொகையில் 1 சதவீதம் ஆகும். இதில் அகதிகள் மட்டுமில்லாமல் வன்முறைகள், மனித உரிமை மீறல்கள், அடைக்கலம் கோருவோர் மற்றும் உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ளவர்களும் அடங்கும். 53.2 சதவீதத்தினர் சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர். உக்ரைன் போரில் வீடு, உடமைகளை இழந்தவர்களுக்கு மனிதாபிமான ரீதியில் பல நாடுகள் உதவி அளிக்கின்றன. இது உற்சாகம் அளிக்கும் வகையில் உள்ளது’’ என்றார்.
மேலும் செய்திகள்
ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்யும் ஐரோப்பிய நாடுகள் மீண்டும் அழிவுப்பாதை: கைவிடப்பட்ட பருவநிலை கொள்கை; திறக்கப்படும் நிலக்கரி சுரங்கங்கள்
ரஷ்யாவிடம் இருந்து தங்கம் இறக்குமதி செய்ய ஜி-7 தடை
40க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பு குரங்கம்மை அவசர நிலை இப்போது தேவை இல்லை: உலக சுகாதார அமைப்புக்கு பரிந்துரை
உச்ச நீதிமன்ற தடையால் புது முடிவு கருக்கலைப்புக்கான செலவை ஏற்கும் அமெரிக்க நிறுவனங்கள்
கடும் நெருக்கடிக்கு இடையே பெட்ரோல், டீசல் விலை இலங்கையில் அதிகரிப்பு: ஒரு லிட்டர் ரூ.470, ரூ.460
ஜெர்மனியில் பிரதமர் மோடி பேச்சு ஒவ்வொரு இந்தியன் மரபணுவிலும் ஜனநாயகம்: ஜி-7 மாநாட்டில் பங்கேற்பு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!