SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புல்லட்சாமி மீது கடும் கோபத்தில் இருக்கும் ஷாக் துறை ஊழியர்களின் நிலையை சொல்கிறார் : wiki யானந்தா

2022-05-24@ 00:04:13

‘‘மின்வாரியத்துறையினர் யார் மீது கோபத்தில் இருக்காங்க...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘புதுச்சேரியில்  மின்துறையை தனியார் மயமாக்க கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. ஊழியர்  சங்கங்கள் இந்த முடிவை கைவிட வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி  வந்தன. இதற்கிடையே மாநில அரசு இதற்கு அனுமதி வழங்காது என முதலில்  தெரிவிக்கப்பட்டது. ஆனால், புதுச்சேரியில் நடப்பது கூட்டணி அரசு என்பதால், தனியார் மயத்துக்கு  ஒப்புதல் கொடுக்குமாறு புல்லட்சாமிக்கு டெல்லியில் இருந்து அழுத்தம் வந்து கொண்டே இருந்தது. இதற்கிடையே ஒன்றியத்தின் பவர்புல் அமைச்சர் வருகைக்கு பிறகு, மின்துறை தனியார்  மயத்துக்கு  புல்லட்சாமி ஓகே சொல்லிவிட்டாராம். அமைச்சரவை கூட்டி  முடிவெடுக்க வேண்டிய  விஷயத்தை வெளியே சொல்லாமல் கமுக்கமாக தனியார் மய  கோப்புக்கு புல்லட்சாமி  ஒப்புதல் வழங்கி அனுப்பி விட்டாராம். அடுத்ததாக தூத்துக்குடியுடன் தொடர்புடைய ஒரு வில்லங்க நிறுவனத்துக்கு இயற்கை எரிவாயு எடுக்கும் கோப்புக்கும் அனுமதி  வழங்கப்பட்டதாக சொல்றாங்க. மே மாதம் 9ம்  தேதியே மின்துறை தனியார்மய கோப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டதாக  எதிர்கட்சிகள் உண்மையை போட்டு உடைத்துள்ளன. இதனால், மின்துறை அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை டென்ஷனில் இருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘இலைக்கட்சி ஆட்சி போயும் ஒரு அதிகாரியின் விஸ்வாசம் மட்டும் இன்னும் மாறவில்லையாமே, அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கோவை மதுக்கரை தாலுகா அலுவலகத்தில் உயரதிகாரியாக பணியாற்றும் ஒரு பெண் அதிகாரி பிடிவாத குணம் கொண்டவராம்.  மனு கொடுக்க வரும் மக்களை மதிப்பதே இல்லையாம். சிறியவர்கள், பெரியவர்கள் என்ற பேதம் இல்லாமல் எல்லோரையும் ஒருமையில் தான் பேசி வர்றாராம். வெறும் மனு மட்டும் கொண்டுவந்தால் இப்படிதான் பேசுவேன்... கரன்சி இருந்தால் தான் உன் பிரச்னையை காது கொடுத்து கேட்பேன் என்கிறாராம். வசூல் வேட்டையும் வெளிப்படையாகவே நடக்கிறதாம். இவரது நடவடிக்கையை பார்த்து, தாசில்தார் அலுவலக ஊழியர்களே அதிர்ந்து போய்விடுகிறார்கள். இவை எல்லாவற்றையும்விட, வருவாய் துறையில், மாவட்ட நிர்வாகத்தில் என்னென்ன புது உத்தரவுகள் வந்துள்ளது. எந்தெந்த அதிகாரி இலைக்கட்சிக்கு எதிராக செயல்படுகிறார் என உடனுக்குடன் உள்ளூர் இலைக்கட்சி விஐபிகளுக்கு தகவல் கொடுக்கிறார். கடந்த இலைக்கட்சி ஆட்சியின்போது, ஆக்கிரமித்து வைத்துள்ள அரசு நிலங்கள் மற்றும் கோயில் நிலங்களை மீட்கச்சொல்லி யாராவது புகார் மனு கொடுத்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட இலைக்கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்து கரன்சியை கறந்துவிடுகிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ குட்டி அதிகாரிகளுக்குள் என்ன தகராறு... சொல்லேன் கேட்போம்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வெயிலூர்  மாவட்டத்துல அணையான தாலுகாவுலயும் ஜமாபந்தி நடந்து வருது.  டெபுடி கலெக்டர் பப்ளிக்கிட்ட பெட்டிஷன்களை வாங்கி ஆய்வு செய்து வர்றாரு.  இதுல சில நாட்களுக்கு முன்னாடி, அணையான தாலுகாவுல நடந்த ஜமாபந்தியில  பப்ளிக் ஒருத்தர் மனு கொடுக்க வந்திருக்காரு. அப்போ, ரெகுலர் தாசில்தாரும்,  ஓஏபி தாசில்தார் 2 பேரும் இருந்திருக்காங்க. அப்ேபா ரெகுலர்  தாசில்தாரு, டெபுடி கலெக்டர் கிட்ட கணக்கு விவரங்களை கூறிவந்தாராம். அந்த  நேரத்துல, ஓஏபி தாசில்தாரு, மனு கொடுக்க பப்ளிக்கை உள்ளே வாங்கன்னு  அழைச்சிருக்காரு. இதனால ஆத்திரமடைஞ்ச ரெகுலர் தாசில்தாரு, நான் கணக்கு  விவரங்களை சொல்லிக்கிட்டிருக்கேன், இப்ப ஏன் பப்ளிக்க உள்ளே  அழைக்கிறீங்கன்னு கேட்டிருக்காரு. இதுல 2 தாசில்தாருக்கும் டெபுடி கலெக்டர்  முன்னிலையிலயே தகராறு ஏற்பட்டிருக்கு.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த  டெபுடி கலெக்டரு, நான் இருக்கும்போதே இப்படி சண்டை போடுறீங்களேன்னு தலையில  அடிச்சிகிட்டாராம். இதை பார்த்த பொதுமக்கள், எங்க பிரச்னையை சொல்ல வந்தா... இவங்க சண்டை போட்டுக்கிறாங்க... இவங்க பிரச்னையை தீர்க்க யாருக்கிட்ட போவாங்க... இந்த நிலையில நம்ம மனுவை கவனிப்பாங்களா...’’ என்று வருத்தப்பட்டுக் கொண்டே பொதுமக்கள் போனாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘முட்டை மாவட்டத்தில் என்ன ஸ்பெஷல்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘முட்டை மாவட்ட நகர்ல இருக்கிற பாளையம் ஸ்டேஷன்ல, முருக கடவுள் பேர கொண்ட காக்கி அதிகாரி, நூதன முறையில் வசூல் வேட்டை செய்றதுல கில்லாடியாம். ஒரு வருசத்துக்கு முன்னாடி, மதுரையில இருந்து புரமோசன்ல இங்க வந்த அவரு, ஸ்டேஷன் லிமிட்ல இருக்கிற கிராம பஞ்சாயத்து தலைவருங்கள கூப்பிட்டு, ஊருக்குள்ள திருட்டை கண்காணிக்கனும், குற்ற சம்பவங்கள குறைக்கனும்.. அதுக்கு சிசிடிவி கேமரா பொருத்துங்க அப்டின்னு அட்வைஸ் பண்ணியிருக்காரு.

அட, நல்ல விஷயம் தானேன்னு, பஞ்.தலைவருங்களும் ஒப்புக்கிட்டாங்களாம். அதுக்காக, அவங்க கிட்ட குறிப்பிட்ட அமவுண்ட்ட வாங்கிக்கிட்ட காக்கி அதிகாரி தனக்கு தெரிஞ்ச சில நிறுவனங்கள்ல இருந்து ஆட்களை அனுப்பி, சிசிடிவி கேமராவ பொருத்த ஏற்பாடு செஞ்சிட்டாராம். அரசியல்வாதிகளை போலவே இவரும், குறிப்பிட்ட அளவு கமிஷனை கறந்துட்டாரே அப்டின்னு, தலைவருங்க புலம்பிட்டு இருக்காங்களாம். இதுமட்டுமில்லாம, ஸ்டேஷன்ல வசூலாகுற அமவுண்ட் மொத்தமும், தன்னோட பாக்கெட்ட நிரப்பறதுல மட்டுமே இவரு குறியா இருக்கிறாராம். இதனால, கடந்த ஒரு வருசத்துல இந்த ஸ்டேஷனுக்கு மாத்தலாகி வந்த 3 எஸ்ஐ.,ங்க, இன்ஸோட வசூல் வேட்டைக்கு முன்னாடி தாக்குப்பிடிக்க முடியாம, விட்டால் போதும் அப்டின்னு வேற ஸ்டேஷனை நோக்கி ஓடிட்டாங்களாம்...’’ விக்கியானந்தா. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tailllo111

  நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

 • glass-park-29

  ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

 • asaam_rain

  அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

 • tour-28

  ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்