SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம்

2022-05-23@ 23:59:57

சென்னை: தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 1000 மருத்துவர்களுக்கான இடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்புவதற்காகவும், பணி இடமாறுதலுக்கான கலந்தாய்வும் நாளை தொடங்கி 6 நாட்களுக்கு நடக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக மருத்துவர்களுக்கான கலந்தாய்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், இந்த முறை 4000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்தாய்விற்காக விண்ணப்பித்துள்ளனர். இதில் மருத்துவ கல்வி இயக்குனரகம், பொது சுகாதாரத்துறை, ஊரக மருத்துவ பணிகள் துறை சார்பில் உள்ள மருத்துவர்கள் பங்கேற்கின்றனர்.மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். கலந்தாய்விற்கு பிறகு காலியாக உள்ள மருத்துவர்களுக்கான பணியிடங்கள் சமன் செய்யப்படுவதோடு, புதிய காலிப் பணியிடங்கள் கண்டறியப்படும் எனவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்