ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை!.. 5 நாட்களில் சவரனுக்கு ரூ. 736 உயர்ந்து ரூ.38,648க்கு விற்பனை!! ..
2022-05-23@ 09:46:03

சென்னை: அண்மைக்காது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது.ஏதோ ஒரு நாள் லமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறவிலை குறைக்கப்பட்டாலும் அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய அளவில் உயர்த்தப்படுகிறது. இதனால் நகை வாங்கும் பெரும் சிரமத்தில் உள்ளனர்
குறிப்பாக அட்சயதிருதியை அன்று நகை விற்பனை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்தது. அதை தொடர்ந்து தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. 19ம் தேதி தங்கம் விலை சற்று அதிகரித்தது. கிராமுக்கு ரூ16 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 4,755க்கும், சவரனுக்கு ரூ128 உயர்ந்து ஒரு சவரன் ரூ38,040க்கும் விற்கப்பட்டது. 20ம் தேதி தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ38 அதிகரித்து ஒரு கிராம் ரூ4,793க்கும், சவரனுக்கு ரூ. 304 அதிகரித்து ஒரு சவரன் ரூ38,344க்கும் விற்கப்பட்டது. 21ம் தேதியும் சவரன் ரூ.192 உயர்ந்தது.
இந்த நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.14 உயர்ந்து 4,831 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38,648 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று ஒரு கிராம் வெள்ளி 66.10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 66.100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம், கொரோனா பரவல் பற்றிய அச்சம் என பல காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்வு.: சவரன் ரூ.38,280 -க்கு விற்பனை
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.187 குறைந்து ரூ.2,186க்கு விற்பனை: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை!! .
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் நேற்றைய விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.... ஒரு கிராம் ரூ.4,683-க்கும், சவரன் ரூ.37,464-க்கு விற்பனை
சண்டிகர்கள் நடைபெற்ற 2 நாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறைவு: பல்வேறு பொருட்களின் மீதான வரி உயர்வு; மருத்துவ உபகரணங்கள் மீதான வரி குறைப்பு
சூதாட்ட விடுதிகள், குதிரை பந்தயம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% வரி விதிக்க இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து, சவரன் ரூ.37,864-க்கு விற்பனை
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்