குதுப்மினார் வளாகத்தில் அகழாய்வு நடக்காது... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி!!
2022-05-23@ 09:31:56

டெல்லி : ஞானவாபி மசூதியை தொடர்ந்து குதுப்மினார் வளாகத்தில் அகழாய்வு செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பதாக வெளியான தகவலை ஒன்றிய அரசு மறுத்துள்ளது. டெல்லியில் உள்ள புராதன நினைவுச் சின்னங்களில் குதுப்மினார் கோபுரமும் ஒன்று. இதனை குட்புதின் -அய்பக் காட்டவில்லை. இந்து மன்னரான விக்கிரமாதித்யா என்பவரே கட்டினார் என்ற ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அதிகாரி தரம் விர் ஷர்மாவின் கூற்று சர்ச்சைக்கு வித்திட்டது.
இது உண்மையா என்பதை கண்டறிய குதுப்மினார் வளாகத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தொல்லியல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் பரவியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து குதுப்மினார் வளாகத்தில் அகழ்வாராய்ச்சி ஏதும் நடத்தப்போவதில்லை என்று ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அப்படியான எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று அத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும் செய்திகள்
வெடுருகுப்பம் மண்டலம் போடபண்டத்தில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்-கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் தாய் மடி திட்டம் சமுதாயத்தை மாற்றும் ஆற்றல் கல்விக்கு மட்டுமே உள்ளது-முதல்வர் ஜெகன்மோகன் பேச்சு
மின்சார சைக்கிள்களின் விலை ரூ.15 ஆயிரம் வரை குறைப்பு: ஹீரோ நிறுவனம் முடிவு
“திரௌபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்?” என ட்விட்டரில் பதிவிட்ட இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு
ஜூலை 11ம் தேதி திட்டமிட்டபடி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தேசிய தேர்வு முகமை திட்டவட்டம்..!
மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து... 8 பேர் உயிருடன் மீட்பு.. ஒருவர் பலி... 11 பேர் காயம்
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!