பேட்டரி வடிவமைப்பு குறைபாடும், சரிவர பரிசோதிக்கப்படாததுமே இ - ஸ்கூட்டர்கள் தீப்பிடிக்க காரணம் : டி.ஆர்.டி.ஓ ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!
2022-05-23@ 09:01:51

டெல்லி : உள்நாட்டின் தயாரான இ - ஸ்கூட்டர்கள் அடிக்கடி தீப்பற்றி எரிவது ஏன் என்பது குறித்து டி.ஆர்.டி.ஓ ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இருசக்கர வாகன விற்பனையில் இ - ஸ்கூட்டர்களின் பங்கை 2%ல் இருந்து 80% ஆக அதிகரிக்க வேண்டும் என்பது ஒன்றிய அரசின் நோக்கம். ஆனால் புதிதாக வாங்கப்பட்ட இ - ஸ்கூட்டர்கள் பலவும் ஆங்காங்கே தீப்பிடித்து எரிந்து உயிர்களை காவு வாங்கியது ஒன்றிய அரசின் நோக்கம் நிறைவேற பெரும் இடையூறாக அமைந்தது. இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை ஒன்றிய சாலை, போக்குவரத்துத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது.
அதன்படி டிஆர்டிஓ நடத்திய ஆய்வில் இ - ஸ்கூட்டர்களில் பேட்டரி வடிவமைப்பில் குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது. அத்துடன் இ - ஸ்கூட்டர்கள் சரிவர பரிசோதிக்கப்படாமல் அவசரகத்தியில் விற்பனை சந்தைகளுக்கு அனுப்பப்பட்டது காரணமாக இருக்கலாம் என்றும் டி.ஆர்.டி.ஓ ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. செலவினத்தை குறைக்க இ - ஸ்கூட்டர்கள் தயாரிப்பு நிறுவனங்கள் வேண்டுமென்றே தரமற்ற பொருட்களை பயன்படுத்தி இருப்பதையும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
ஆந்திராவில் காரில் ரகசிய அறை அமைத்து கடத்தல் ₹5.80 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்-விஜயவாடா சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி
ஆந்திராவில் முதல் முறையாக 5 மாடி கட்டிடத்துக்கு சோலார் தகடுகள் அமைப்பு-100 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி
வெடுருகுப்பம் மண்டலம் போடபண்டத்தில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்-கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் தாய் மடி திட்டம் சமுதாயத்தை மாற்றும் ஆற்றல் கல்விக்கு மட்டுமே உள்ளது-முதல்வர் ஜெகன்மோகன் பேச்சு
மின்சார சைக்கிள்களின் விலை ரூ.15 ஆயிரம் வரை குறைப்பு: ஹீரோ நிறுவனம் முடிவு
“திரௌபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்?” என ட்விட்டரில் பதிவிட்ட இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!