தெரு நாய்கள் துரத்தியதால் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் பலி : குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உத்தரவு!!
2022-05-23@ 08:14:45

ஹோஷியார்பூர்: ஹோஷியார்பூர் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம், பைரம்பூர் அருகே கியாலா புலந்தா கிராமத்தில் உள்ள ஒரு வயலில் 6 வயது சிறுவன், ரித்திக் ரோஷன் நேற்று விளையாடி கொண்டிருந்தான். அப்போது, சில தெருநாய்கள் அவனை துரத்தின. இதனால், பயந்துபோன ரித்திக் ரோஷன், நாய்களிடம் இருந்து தப்பிக்க ஓடிய போது அங்கு திறந்தவெளியில் இருந்த 100 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.
தகவலறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு, மருத்துவ குழுவினர் மற்றும் அரசு அதிகாரிகள், சிறுவனை மீட்க முயன்றனர். 100 அடி ஆழத்தில் சிறுவன் இருந்ததால், குழாய்கள் மூலம் அவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டது. மேலும், சிறுவனின் உடல்நிலையை கண்காணிக்க ஆழ்துளை கிணற்றின் உள்ளே கேமராவும் வைக்கப்பட்டது. இதையடுத்து, ராட்சத இயந்திரம் மூலம் மண்ணை தோண்டி சிறுவனை மீட்கும் பணி நடந்தது. ஆனால், அந்த இயந்திரம் மூலம் 15 அடி வரை மட்டுமே உள்ளே இறக்க முடிந்தது. 9 மணி நேர போராட்டத்திற்கு பின்பு சிறுவன் மயங்கி நிலையில் மீட்கப்பட்டான். அவனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த துயரச் சம்பவ ம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்,' ஹோஷியார்பூரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஹிருத்திக் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்தான். அச்சிறுவனின் குடும்பத்திற்கு கடவுள் வலிமையை தர வேண்டும். குடும்பத்தின் இழப்பை ஈடு செய்ய முடியாது. இந்த துயர நேரத்தில் அவர்களுடன் நாங்கள் இருக்கிறோம். சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்,'எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
கேரளா, கர்நாடகாவில் நில அதிர்வு பொதுமக்கள் பீதி
ஆந்திராவில் காரில் ரகசிய அறை அமைத்து கடத்தல் ₹5.80 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்-விஜயவாடா சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி
ஆந்திராவில் முதல் முறையாக 5 மாடி கட்டிடத்துக்கு சோலார் தகடுகள் அமைப்பு-100 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி
வெடுருகுப்பம் மண்டலம் போடபண்டத்தில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்-கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் தாய் மடி திட்டம் சமுதாயத்தை மாற்றும் ஆற்றல் கல்விக்கு மட்டுமே உள்ளது-முதல்வர் ஜெகன்மோகன் பேச்சு
மின்சார சைக்கிள்களின் விலை ரூ.15 ஆயிரம் வரை குறைப்பு: ஹீரோ நிறுவனம் முடிவு
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!