அதிமுக மாவட்ட மாணவரணி தலைவருக்கு சரமாரி வெட்டு: போதை ஆசாமிகளுக்கு போலீஸ் வலை
2022-05-23@ 00:17:26

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரியில் வீட்டு வாசலில் இருந்து காரை எடுக்க முயன்ற, அதிமுக மாவட்ட மாணவரணி துணை தலைவருக்கு சரமாரி வெட்டு விழுந்தது. இதில், போதையில் வந்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி, கோகுலம் காலனி விரிவு பகுதி, ராஜி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). இவரது மகன் மணிகண்டன் (24). அதிமுக மாவட்ட மாணவரணி துணை தலைவராக உள்ளார். மேலும், இவர் நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட மகாலட்சுமி நகரில் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.
இந்நிலையில், மணிகண்டன் தனது காரை வீட்டில் இருந்து நேற்று மாலை எடுத்து உள்ளார். அப்போது, இவரை நோட்டமிட்டபடி 2 பைக்குகளில் போதையில் வந்த மர்ம ஆசாமிகள் மணிகண்டனிடம் தகராறு செய்து கையில் வைத்திருந்த கத்தியால் மணிகண்டனின் தலையில் சரமாரியாக வெட்டினர். இதில், அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு ஓடி வந்தனர். இதனை கண்டதும் பைக்குகளில் வந்த மர்ம ஆசாமிகள் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மணிகண்டனை மீட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இது குறித்த புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து போதையில் வந்த 6 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:
AIADMK district student leader cut drug addict police web அதிமுக மாவட்ட மாணவரணி தலைவருக்கு வெட்டு போதை ஆசாமி போலீஸ் வலைமேலும் செய்திகள்
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; வாலிபருக்கு 20 ஆண்டு சிறை: தி.மலை போக்சோ சிறப்பு கோர்ட் தீர்ப்பு
ஆசைவார்த்தை கூறி பணம் பறிப்பு; திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய பெண்ணின் கணவருக்கு ஆபாச வீடியோ: மனைவியை பிரிந்த வாலிபர் கைது
வியாசர்பாடி பகுதியில் கஞ்சா; புகைத்த 3 பேர் கைது
குடந்தை அருகே பதுக்கி வைத்திருந்த உலோக சாமி சிலைகள், பாவை விளக்குகள் மீட்பு: 2 பேர் கைது
வேலூர் அருகே காதலி மீது சந்தேகம் அடைந்து அவரை கத்தியால் குத்திய காதலன் கைது
நாகை அருகே இரு மீனவ கிராமங்கள் இடையே கடும் மோதல்: 2 கிராமங்களைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் கைது
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!