கூடுதல் பொருளாதார தடை விதித்ததற்கு பதிலடி; கனடா பிரதமரின் மனைவி ரஷ்யாவிற்குள் நுழைய தடை
2022-05-22@ 19:00:40

மாஸ்கோ: கூடுதல் பொருளாதார தடைகளை விதித்ததால், கனடா பிரதமரின் மனைவி உள்ளிட்ட சிலர் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் நடந்து வரும் போருக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் உள்ளிட்டோர் அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகளுக்கு வருவதை தடுக்கும் வகையில் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘கனடா பிரதமரின் மனைவி சோபி ட்ரூடோ, கனடா நாட்டின் ராணுவ தளபதி எரிக் ஜீன் கென்னி மற்றும் 24 கனடா அதிகாரிகள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.
ரஷ்யாவிற்கு எதிராக கனடா அறிவித்துள்ள கூடுதல் பொருளாதாரத் தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைமை, ராணுவம் மற்றும் வணிக நிறுவனங்கள் மட்டுமின்றி, கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களும் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், அவரது மகன் ஹண்டர் பிடன் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் உட்பட 963 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
பாகிஸ்தானில் தொடர் மின்வெட்டு; மக்கள் சாலை மறியல் போராட்டம்
இங்கிலாந்தில் 1,076 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு
உக்ரைனில் பல்பொருள் அங்காடி மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்ய அதிபர் புதின் ஒரு பயங்கரவாதி: ஜெலன்ஸ்கி சாடல்
கனடாவில் பயங்கரம்; வங்கிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த 2 மர்ம நபர்கள் சுட்டுக்கொலை: போலீசார் அதிரடி
கொலம்பியா நாட்டில் உள்ள சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 கைதிகள் உடல் கருகி உயிரிழப்பு..பலருக்கு பலத்த தீக்காயம்!!
லாரியில் அடைக்கப்பட்ட 51 அகதிகள் மூச்சுத் திணறி பலியான சம்பவம்... இதயத்தையே நொறுக்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோபிடன் வேதனை!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!