எரிபொருள் விலை குறைப்பு குறித்த அறிவிப்பால் மக்களை முட்டாளாக்குவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: ராகுல் காந்தி ட்வீட்
2022-05-22@ 17:34:07

டெல்லி: எரிபொருள் விலை குறைப்பு குறித்த அறிவிப்பால் மக்களை முட்டாளாக்குவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை 110 ரூபாயையையும், டீசல் விலை 100 ரூபாயையும் தாண்டி விற்பனையானதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. கடந்த 45 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து நேற்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி பெட்ரோல் ரூ.8.22, டீசல் ரூ.6.70 குறைக்கப்பட்டது.
இந்த வரிக்குறைப்பு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி; பெட்ரோல், டீசல் விலை இனி நாள்தோறும் மீண்டும் ரூ.0.8, ரூ.0.3 என உயரத் தொடங்கும். உண்மையான நிவாரணத்தை மக்களுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டும். பணவீக்கத்திலிருந்து உண்மையான நிவாரணத்தை பெற பொதுமக்களுக்கு தகுதி உள்ளது. எரிபொருள் விலை குறைப்பு அறிவித்த அறிவிப்பால் மக்களை முட்டாளாக்குவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
லீனாவின் போஸ்டர் விவகாரம்; ‘காளி’ குறித்து பெண் எம்பி சர்ச்சை கருத்து: திரிணாமுல் காங்கிரஸ் திடீர் விளக்கம்
நுபுருக்கு கொலை மிரட்டல்: அஜ்மீர் தர்கா நிர்வாகி கைது
ஆப்கான் மதகுரு சுட்டுக் கொலை: மகாராஷ்டிராவில் பயங்கரம்
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நுபுர் சர்மாவுக்கு மீண்டும் சம்மன்
பாஜக குடியரசு துணை தலைவர் வேட்பாளர் அப்பாஸ் நக்வி?.. அடுத்தடுத்து 2 ஒன்றிய அமைச்சர்கள் ராஜினாமாவால் பரபரப்பு
சாக்கடையில் இறங்கி ஆளுங்கட்சி எம்எல்ஏ போராட்டம்: ஆந்திராவில் பரபரப்பு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!