பழங்குடியின மக்களின் தொடர் எதிர்ப்பால் தபி - நர்மதா நதிகள் இணைப்பு திட்டம் ரத்து: குஜராத் தேர்தல் தோல்வி அச்சத்தால் பாஜக பல்டி
2022-05-22@ 16:23:42

காந்திநகர்: குஜராத் தேர்தலுக்கு மத்தியில், பழங்குடியின மக்களின் தொடர் எதிர்ப்பால் தபி - நர்மதா நதிகள் இணைப்பு திட்டம் ரத்து செய்யப்படுதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்தர் படேல் தலைமையிலான பாஜக அரசு நடக்கிறது. சவுராஷ்டிரா மற்றும் கட்ச் ஆகிய பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அம்மாநில அரசு தபி - நர்மதா நதிகள் இணைப்பு திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், இத்திட்டத்திற்கு பழங்குடியின சமூக மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்திட்டத்தை அமல்படுத்தினால் 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கும் என்று கூறப்படுகிறது. எனவே, இத்திட்டத்தை மாநில அரசு திரும்பப் பெறவேண்டும் என்று முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், பழங்குடியினரின் வாக்கு வங்கி பறிபோய் விடுமோ? என்ற அச்சத்தில், தபி - நர்மதா இணைப்பு திட்டத்தை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் பூபேந்தர் படேல் கூறுகையில், ‘குஜராத் மாநில அரசு, தபி - நர்மதா இணைப்பு திட்டத்தை ரத்து செய்துள்ளது. இந்த திட்டம் ஒன்றிய அரசுக்கு சொந்தமானது. குஜராத் அரசு பழங்குடியினருக்கு ஆதரவாக இருக்கும். இந்த திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு தவறான கருத்துக்கள் பரப்பி வருகின்றன’ என்றார்.
குஜராத்தின் மொத்த 180 இடங்களில் குறைந்தபட்சம் 27 இடங்களில், பழங்குடி சமூகம் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது. கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு பழங்குடியினரின் வாக்குகள் அதிகம் கிடைத்தன. அதனால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், அவர்களில் சிலர் பாஜகவுக்கு தாவி அமைச்சரானதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த சூழ்நிலையில், இந்த முறை தேர்தலில் 150க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கை பாஜக நிர்ணயித்துள்ளது. அதனால் பழங்குடி சமூக மக்களின் வாக்குகளை கவர, அவர்களுக்கு எதிரான திட்டங்களை அறிவித்துவிட்டு தற்போது அதனை மாநில அரசு வாபஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
ஆப்கான் மதகுரு சுட்டுக் கொலை: மகாராஷ்டிராவில் பயங்கரம்
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நுபுர் சர்மாவுக்கு மீண்டும் சம்மன்
பாஜக குடியரசு துணை தலைவர் வேட்பாளர் அப்பாஸ் நக்வி?.. அடுத்தடுத்து 2 ஒன்றிய அமைச்சர்கள் ராஜினாமாவால் பரபரப்பு
சாக்கடையில் இறங்கி ஆளுங்கட்சி எம்எல்ஏ போராட்டம்: ஆந்திராவில் பரபரப்பு
செப்டம்பர் மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ300 டிக்கெட் நாளை வெளியீடு
உடல்நிலை மோசமடைந்து வருவதால் லாலு டெல்லி எய்ம்சில் அட்மிட்?.. புகைப்படத்தை வெளியிட்ட மகள்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!