வாயில் விஷத்தை ஊற்றி மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது
2022-05-22@ 15:16:39

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா சிறுதலைக்காடு மேல தெருவை சேர்ந்தவர் குமார்(45). இவரது மனைவி தனபாக்கியம்(35). இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் குமார், தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த குமார், மனைவி மீது சந்தேகப்பட்டு அவரது கையை பின் பக்கத்தில் வைத்து கட்டி வாயில் பூச்சி மருந்தை ஊற்றி கொல்ல முயன்றார்.
அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தனபாக்கியத்தை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிந்து குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
முகவரி கேட்பதுபோல் நடித்து மூதாட்டியை தாக்கி 5 சவரன் பறிப்பு
சபலத்தில் மயங்கிய வாலிபரிடம் ரூ5 ஆயிரம் டெபிட் கார்டு அபேஸ்: 4 பெண்களுக்கு வலை
ரூ.10 கோடி திமிங்கல எச்சம் பறிமுதல்: பதுக்கிய 3 பேர் மதுரையில் கைது
வழிப்பறி கொள்ளையன் கைது
கோயில் சிலைகளை சேதப்படுத்தியவர் கைது
பள்ளி மாணவியை கர்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!