ஆழியார் அணையில் ஒன்றிய ரிசர்வ் படை கல்லூரி வீரர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி
2022-05-22@ 11:06:54

ஆனைமலை: கோவை அருகே உள்ள தொப்பம்பட்டி ஒன்றிய ரிசர்வ் படை பயிற்சி கல்லூரியில் உள்ள வீரர்களுக்கு ஆழியார் அணையில் பேரிடர் மீட்பு பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால், நேற்று ஒன்றிய ரிசர்வ் படை பயிற்சி கல்லூரியின் ஐஜி வர்மா உத்தரவின் பேரில், கமாண்டோ ராஜேஷ்குமார், துணை கமாண்டோ ஹரிகுமார், ஆகியோர் தலைமையில், 80 மீட்பு படை வீரர்களுக்கு ஆழியார் அணையில் பயிற்சி மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடை பெற்றது.
பயிற்சியின்போது, பேரிடர் காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சம்பவ இடத்தில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எவ்வாறு மீட்பு பணிகளை மேற்கொள்வது என்பது குறித்தும், நீரில் மூழ்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்தும், பயிற்சி மற்றும் வீரர்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி செய்து காண்பிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் மீட்புப் படை ஆய்வாளர் சுனில் மற்றும் பிரபு ஆகியோர் தலைமையில் 8 பேர் கொண்ட அதிகாரி பயிற்சி அளித்தனர்.
மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு
அரியலூரில் விமானம் விழுந்ததாக வதந்தி
திருவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ஆனி சுவாதி திருவிழா; கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
ஓட்டப்பிடாரம் அருகே பரபரப்பு, ஆம்னி பஸ் எரிந்து சேதம்; பயணிகள் உயிர் தப்பினர்
ராஜபாளையத்தில் அதிகாலை பரபரப்பு ஹார்டுவேர்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து; ரூ.80 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
பழனியில் இருந்து கோவைக்கு மின்சார ரயில் சோதனை ஓட்டம்!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;