தமிழகத்தில் முதல்முறையாக; பெரம்பலூரில் அமோனைட்ஸ் அருங்காட்சியகம்: கலெக்டர் ஆய்வு
2022-05-22@ 11:03:12

பெரம்பலூர்: பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த கட்டடத்தில், சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துபோன கடல்வாழ் உயிரினமான அமோனைட்ஸ்கள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்லுயிர்எச்சங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுவரும் ”அமோனைட்ஸ் மையத்தினை” கலெக்டர் வெங்கடபிரியா, நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துபோன கடல்வாழ் உயிரினமான அமோனைட்ஸ் எனப்படும் நத்தைபோன்ற தோற்றமுடைய உயிரினங்களின் படிவங்கள் நமது பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவு கிடைக்கின்றது. பெரம்பலுர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அம்மோநைட்ஸ் படிமங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் வகையில் பிரத்யேக மையம் அமைக்கப்பட்டு வருகின்றது.
தலைக்காலி எனும் வகையினை சேர்ந்த அம்மோநைட்ஸ்கள் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டது. இந்த கடல்சார் உயிரினங்களில் படிமங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் காரை, கொளக்காநத்தம், பிலிமிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிடைக்கின்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் 112 வகையான தொல்லுயிர் எச்சங்கள் கிடைக்கின்றது. அமோனைட்ஸ்களின் முழு உருவம் எவ்வாறு இருக்கும் என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக அந்த உயிரினத்தின் மாதிரி தோற்றம் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிடைக்கப்பபெற்ற 300 வகையான தொல்லுயிர் எச்சங்கள் இங்கு கட்சிப்படுத்தப்பட உள்ளது. அமோடைஸ் குறித்து அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இந்த மையம் பெரிதும் பயனுள்ள வகையில் இருக்கும். பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்த மையம் சிறந்த பொழுதுபோக்கு மையமாக இருக்கும்.தமிழக அளவில் அமோனைட்ஸ்களுக்கென்று பிரத்யேக அருங்காட்சியகம் அமைக்கப்படுவது இதுவே முதன்முறை. விரைவில் பணிகள் முடிவடைந்து இந்த அமோனைட்ஸ் மையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்வின்போது புவியியல் துறை உதவி மேலாளர் பிரசாந்த் சுந்தரேசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
அதிமுக பிளவுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓபிஎஸ்; மாஜி அமைச்சர் உதயகுமார் தாக்கு
சாதி ரீதியாக பிளவுபடுத்த முயற்சி; ஓபிஎஸ் மீது செல்லூர் ராஜூ மறைமுக தாக்கு
அடுத்த மாதம் 10ம் தேதி ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.!
விருத்தாசலம் அருகே வலசை கிராமத்தில் மர்மநபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் சாந்தகுமாரி என்ற இளம்பெண் பலத்த காயம்..!
ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாய்மர படகு போட்டி
சாலையில் வைக்கப்படும் விளம்பர பேனர்களால் உயிர்பலி ஏற்படும் அபாயம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!