திருப்பத்தூர் மாய பிள்ளையார் கோயில் தெருவில் குப்பை கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம்: உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
2022-05-22@ 11:00:33

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகராட்சி பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் குப்பை இல்லாத நகராட்சியாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பத்தூர் நகராட்சி உள்ளது நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளது. இதில் சுமார் 50, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தற்போது திருப்பத்தூர் பகுதிகளில் குப்பைகள் ஆங்காங்கே அள்ளப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் பிணங்களை எரிக்கும் சுடுகாட்டில் குப்பைகளை கொட்டியதால் தற்போது பிணங்கள் புதைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் பலமுறை நகராட்சி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், திருப்பத்தூர் நகர் சுற்றி குப்பை நகரமாக மாறி உள்ளது. குப்பைகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே துர்நாற்றம் வீசுகிறது.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாய பிள்ளையார் கோயில் தெரு, பெரியகுளம் பகுதியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் மற்றும் மாய பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு கடை வைத்திருக்கும் பழகடை உரிமையாளர்கள் அழுகிய பழங்கள் மற்றும் கழிவுகளை மாய பிள்ளையார் கோயில் அருகே ெகாட்டுவதால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்ககாமல் உள்ளனர். தற்போது அந்த பகுதி முழுவதும் அழுகி துர்நாற்றம் வீசி கொசுக்கள், ஈக்கள் தொல்லை ஏற்பட்டு சுகாதாரமற்ற முறையில் உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர், நகரப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
பாலியல் புகாரின் கைதானபாஜ நிர்வாகியின் காவல் நீட்டிப்பு
சிறுமிகளை கர்ப்பமாக்கிய வழக்கில் போக்சோவில் 2 பேர் கைது: 8 பேருக்கு வலை
தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
குடும்பத்தினருடன் விடுதலை செய்யக்கோரி திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர் தீக்குளிப்பு; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி ஆர்ப்பாட்டம்; தனியாக ஆயுதப்படையை உருவாக்கி தேர்தலுக்கு பயன்படுத்த பா.ஜ திட்டம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
சதுரகிரி செல்ல 4 நாள் அனுமதி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!