உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49.71 கோடி ஆக உயர்வு!!
2022-05-22@ 07:10:31

வாஷிங்டன் : உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 52.72 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று, சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று உருமாறி வரும் வகைகளால் கொரோனா பரவல் அதிகரித்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,72,33,817-ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2,37,52,940 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 49,71,81,067 பேர் குணமடைந்துள்ளனர். எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62,99,810 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுவதால் ஒரே நாளில் 2 அமைச்சர்கள் ராஜினாமா: இங்கிலாந்து பிரதமருக்கு கடும் நெருக்கடி
நைட் கிளப்பில் பாலியல் ரீதியாக அநாகரீகம் : ராஜினாமா செய்த 2 அமைச்சர்கள்.. புது அமைச்சர்களை நியமித்து இங்கிலாந்து பிரதமர் அதிரடி
ஏமன் நாட்டில் ராணுவ ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து... 10 பேர் பலி.. 45 பேர் படுகாயம்!!
அரசியல் எனக்கு ஒத்துவராது அக்ஷய் குமார் கருத்து
2 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விமான சேவை மீண்டும் துவங்கும் சீனா: இந்தியாவுக்கு அனுமதியில்லை
ரஷ்யாவின் எதிர்ப்பை மீறி பின்லாந்து, ஸ்வீடனுக்கு நேட்டோவில் அனுமதி: 30 நாடுகள் ஒப்புதல் கையெழுத்து
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!