SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வளர்ச்சி உறுதி

2022-05-22@ 02:19:45

ஒன்றிய அரசு நடத்திய குடும்ப சுகாதார சர்வே 2019-2021ல் குழந்தைகளின் சத்து குறைபாடு பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சராசரியாக 36 சதவீதம் பேர் வளர்ச்சி குன்றி காணப்படுகின்றனர். தமிழ்நாட்டில் இது தேசிய சராசரியைவிட குறைவு என்றாலும், 100க்கு 25 குழந்தைகள் வளர்ச்சி குன்றி உள்ளனர். உடலில் உறுதி இல்லாவிட்டால் அவர்களது எதிர்காலம் என்பது கேள்விக்குறியாக ஆகிவிடும்
இதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவாக உணர்ந்துள்ளார். இதனால்தான், சத்து குறைபாட்டை போக்கும் திட்டத்தை துவங்கப்போவதாக பேரவையில் அறிவித்தார்.  

அப்போது, ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தில் கிடைத்த தகவல் மிக மிக மன வேதனையைத் தருவதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பரிசோதித்ததில் அவர்களில் பெரும்பாலானவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களாக இருந்தார்கள். இதனால் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க முதல்வரின் ஆலோசனையின்பேரில் தனி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் குறிப்பிட்டார்.
அறிவித்து 15 நாட்களில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதுதான் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் வேகம். திட்டத்தை அறிவித்து, பின்னர் என்ன செய்யலாம் என்று யோசித்து, திட்டத்தை வகுத்து பின்னர் துவங்குவது என்றெல்லாம் கிடையாது. திட்டத்தை தயாரித்துவிட்டு, அதன்பின்னர்தான் அறிவிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதுதான் அவரது ஸ்டைல். நீலகிரியில் நேற்று 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் கீழ், குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்தச் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஒருமாத காலத்திற்கு நடைபெறும். மருத்துவப் பரிசோதனைகளுக்குப்  பிறகு ஊட்டச்சத்து மட்டும் தேவைப்படும் குழந்தைகளுக்கு தனியாக சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டமும் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தின்கீழ், தமிழகக் குழந்தைகள் அனைவரையும் திடமான, ஊட்டச்சத்துக் குறைபாடில்லாதவர்களாக மாற்றுவதற்கு நம்முடைய முதல்வர் திட்டமிட்டுள்ளார். எதை செய்தால் அடுத்த தேர்தலில் அதிக வாக்குகளை பெற முடியும் என்று ஓட்டரசியலை பிரதானப்படுத்தும் தலைவர்கள் மத்தியில் வருங்கால சமுதாயத்தின் நலனை பற்றி சிந்திக்கும் ஒருவர் நம் முதல்வராக கிடைத்துள்ளார். திராவிட மாடல் ஆட்சியால் மட்டுமே இதுபோன்ற சாதனைகள் சாத்தியம். குழந்தைகளுக்கான ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ போன்ற தொலைநோக்கு திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை உச்சத்துக்கு கொண்டு செல்லும் என்பது உறுதி.

Like Us on Facebook Dinkaran Daily News
 • tailllo111

  நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

 • glass-park-29

  ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

 • asaam_rain

  அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

 • tour-28

  ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்