மகளுக்கு முறைகேடாக வேலை மேற்கு வங்க அமைச்சரிடம் சிபிஐ 3ம் நாள் விசாரணை
2022-05-22@ 02:16:34

கொல்கத்தா: தனது மகளை சட்ட விரோதமாக அரசு வேலையில் நியமனம் செய்தது தொடர்பாக மேற்கு வங்க அமைச்சரிடம் 3வது நாளாக சிபிஐ விசாரணை நடத்தியது. மேற்கு வங்க கல்வித் துறை இணையமைச்சர் பரேஷ் சந்திர அதிகாரி. இவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி, அரசு உதவி பெறும் பள்ளியில் தனது மகள் அங்கிதாவை முறைகேடாக ஆசிரியர் பணியில் நியமித்தார். இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், அங்கிதாவை டிஸ்மிஸ் செய்ய உத்தரவிட்டது. மேலும், இதுநாள் வரையில் அவர் வாங்கிய சம்பளத்தையும் அரசிடம் திருப்பித் தரவும் உத்தரவிட்டது.
இந்த ஆசிரியர் நியமன முறைகேடு குறித்து சிபிஐ.யும் வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக 3வது நாளாக நேற்றும் சிபிஐ பல மணி நேரம் விசாரணை நடத்தியது. இது குறித்து சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், ‘அங்கிதாவை பணியில் சேர்ப்பதற்காக பரேஷ் சந்திரா யாரிடம் எல்லாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் என்ற விபரங்கள் குறித்து அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது. அதேபோல், அடுத்த வாரம் ஆஜராகும்படி அங்கிதாவுக்கும் சம்மன் அனுப்பப்படும்,’ என்றனர்.
Tags:
CBI probe into West Bengal minister's daughter's misconduct மகளுக்கு முறைகேடாக வேலை மேற்கு வங்க அமைச்சரிடம் சிபிஐ 3ம் நாள் விசாரணைமேலும் செய்திகள்
3000 மெட்ரிக் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது இந்தியா
மனைவி பிரசவத்திற்கு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் இளம்பெண் மீதான மோகத்தில் ரூ.6 கோடியை இழந்த வங்கி மேலாளர்
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடியிடம் ஆதரவு கோரிய யஷ்வந்த் சின்கா
கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது
திருப்பதி கோயிலில் ரூ.4.30 கோடி காணிக்கை
மகாராஷ்டிராவில் உச்சக்கட்ட குழப்பம்: சிவசேனாவின் ஆட்சி, சின்னம் பறிபோகும் அபாயம்; இன்று மீண்டும் கூடியது செயற்குழு கூட்டம்; என்ன செய்ய போகிறார் முதல்வர் உத்தவ் தாக்கரே
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!