மனைவிக்கு சரமாரி வெட்டு: கணவன் கைது
2022-05-22@ 02:10:00

பெரம்பூர்: ஓட்டேரி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (42), ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 வருடங்களுக்கு முன் சுசீலா (38) என்பவருடன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு, மகேஸ்வரன் என்ற 11 மாத குழந்தை உள்ளது. நந்தகுமார் சம்பாதிக்கும் பணத்தை தனது உடன் பிறந்தவர்களுக்கும், அம்மாவுக்கும் செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது சுசீலாவுக்கு பிடிக்காததால் கணவருடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். பின்னர், கணவரை பிரிந்து, பொன்னேரியில் உள்ள அம்மா வீட்டில் சுசீலா வசித்து வந்துள்ளார். அங்கிருந்து, கடந்த திங்கட்கிழமை மீண்டும் தனது கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த நந்தகுமார், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், சுசீலாவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிந்து, நந்தகுமாரை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
செங்கல்பட்டு அருகே பெண்ணை கடத்தி, மது குடிக்க வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்: ஒருவர் கைது; 3 பேருக்கு வலை
பந்தலூர் பகுதியில் கோவில் உண்டியலை உடைத்த கொள்ளையன் கைது
கடன் வாங்கிய பணத்தை திரும்ப கேட்டு மனைவியை தகாத வார்த்தையால் பேசியதால் வாலிபரை கொலை செய்தோம்-கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்
தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நடந்த 83 பவுன் தங்க நகை கொள்ளையில் 2 தனிப்படைகள் விசாரணை-கைரேகைகள் சிக்கின
அண்ணாசாலையில் பைக்கில் சென்றவரை வழிமறித்து ரூ.20 லட்சம் கொள்ளை: போலீஸ் விசாரணை
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!