நெடுஞ்சாலை, ரயில்வே திட்டத்தை தொடங்கி வைக்க வரும் 26ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகாரிகள் ஆய்வு
2022-05-22@ 02:08:16

சென்னை: பிரதமர் மோடி வரும் 26ம் தேதி சென்னை வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பிரதமர் மோடி சென்னைக்கு ஒரு நாள் பயணமாக வரும் 26ம் தேதி வருகிறார். சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் விழாவில், தேசிய நெடுஞ்சாலை புதிய திட்டங்கள், ரயில்வே புதிய திட்டங்கள் உள்பட ஒன்றிய அரசின் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்து பேசுகிறார். இதற்காக வரும் 26ம் தேதி மாலை ஐதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் 5.15 மணிக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஐஎன்எஸ் அடையாறு செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் விழா நடக்கும் நேரு ஸ்டேடியத்திற்கு செல்கிறார். விழா முடிந்ததும் மீண்டும் காரில் புறப்பட்டு ஐஎன்எஸ் அடையாறு வருகிறார். அங்கிருந்து இந்திய விமான படை ஹெலிகாப்டரில் இரவு 7.30 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். பிரதமருக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னை பழைய விமான நிலையத்தில் நடக்கிறது. அது முடிந்ததும் பிரதமர் இரவு 7.40 மணிக்கு இந்திய விமானப்படை விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமரின் பயண திட்டம் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, டெல்லியில் இருந்து பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப்படை அதிகாரிகள், நேற்றுமுன்தினம் சென்னை வந்தனர். பழைய விமான நிலையத்தை ஆய்வு செய்தனர். சென்னை நேரு ஸ்டேடியத்திற்கு காரில் சென்றால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், ஹெலிகாப்டர் பயணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். ஆனால் சென்னை நகரில் தற்போது அவ்வப்போது சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் சாலை வழியையும் தயார் நிலையில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பிரதமரின் உத்தேச பயணத்திட்டம் தான் என்றும், உறுதியான பயணத்திட்டம் ஓரிரு தினங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Tags:
Highway Railway Project 26th Prime Minister Modi visit Chennai நெடுஞ்சாலை ரயில்வே திட்ட 26ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகைமேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கிடையே வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் விதமாக ஊஞ்சல், தேன் சிட்டு இதழ் திட்டத்திற்கு ரூ.7.15 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு: சென்னை காவல் ஆணையர் தொடங்கிவைத்தார்
தமிழ்நாடு அரசின் தாய் - சேய் நல பெட்டக டெண்டருக்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி வரை அவகாசம்
தமிழக விமானநிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை 19 லட்சமாக அதிகரிப்பு
இந்து சமய அறநிலையத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் திருக்கோயில் பெருந்திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!