வாலிபரை தாக்கி வழிப்பறி: மர்ம கும்பலுக்கு வலை
2022-05-22@ 01:56:14

புழல்: செங்குன்றம் அருகே அழிஞ்சிவாக்கம் பகுதியில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இங்கு மும்பை, மேற்குவங்கம் உள்ளிட்ட பல வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ராசல்(19), தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது. பின்னர், ராசலிடம் இருந்த 2 செல்போன் மற்றும் ரூ.15 ஆயிரத்தை பறித்து கொண்டு மர்ம கும்பல் தப்பிச்சென்றது. இதில், படுகாயமடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
பந்தலூர் பகுதியில் கோவில் உண்டியலை உடைத்த கொள்ளையன் கைது
கடன் வாங்கிய பணத்தை திரும்ப கேட்டு மனைவியை தகாத வார்த்தையால் பேசியதால் வாலிபரை கொலை செய்தோம்-கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்
தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நடந்த 83 பவுன் தங்க நகை கொள்ளையில் 2 தனிப்படைகள் விசாரணை-கைரேகைகள் சிக்கின
அண்ணாசாலையில் பைக்கில் சென்றவரை வழிமறித்து ரூ.20 லட்சம் கொள்ளை: போலீஸ் விசாரணை
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சியை கடத்த முயன்ற இலங்கை பெண் கைது
வீட்டை உடைத்து 12 சவரன் திருட்டு
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!