SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விபத்தில் 3 பேர் பரிதாப பலி

2022-05-22@ 01:55:46

திருத்தணி: திருத்தணி அடுத்த மாம்பாக்க சத்திரம் காலனியை சேர்ந்தவர் சங்கர்(35), விவசாயி நேற்று மாலை வேலை நிமித்தமாக திருத்தணி பைபாஸ் பகுதிக்கு வந்துள்ளார். பின் வேலை முடிந்து மீண்டும் மாம்பாக்கம் நோக்கி தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அதேசமயம் திருத்தணி அடுத்த செருக்கனூர் கிராமத்தை சேர்ந்த சுக்கிரன்(26), கஜேந்திரன்(40) ஆகியோர் ஒரே பைக்கில் எதிரே வந்தனர். இதனால் இரு பைக்குகளும் நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். காயமடைந்த சுக்கீரன், கஜேந்திரன் ஆகியோர் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

* ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நீர்வாழி கிராமத்தை சேர்ந்தவர் ரவி(51), அரக்கோணத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு கடந்த சில நாட்களாக முன்பு வந்தார். நேற்று முன்தினம் பொன்பாடி அம்பேத்கர் நகர் அருகே நடந்து சென்றபோது பின்னால் வந்த ஆந்திர பதிவெண் கொண்ட கார் அவர் மீது மோதியதில் ரவி பரிதாபமாக பலியானார்.

புழல்: செங்குன்றம் அடுத்த கண்ணம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நந்தன். இவரது மகன் தமிழன்(21),   ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் சூபர்வைசராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று காலை பைக்கில் வீட்டிலிருந்து புறப்பட்டு மீஞ்சூர் - மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக பூந்தமல்லிக்கு சென்றார். அப்போது பம்மதுகுளம் லட்சுமிபுரம் மேம்பாலத்தில் சென்றபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி இவர் பைக் மீது மோதியது. இதில், தூக்கிவீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த செங்குன்றம் போலீசார் அங்கு விரைந்து சடலத்தை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின்பேரில் லாரி டிரைவர் ஆவடி வீராபுரத்தை சேர்ந்த உமேஸ்வரனை(18) கைது செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

 • pondi-scl-23

  புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

 • admk-23

  50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

 • Goat_Pakistan

  பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்