நடிகர் விஜய் பாபுவை கைது செய்ய உதவுமாறு வெளிநாட்டு தூதரகங்களுக்கு கேரள போலீஸ் கடிதம்
2022-05-22@ 01:46:03

திருவனந்தபுரம்: புதுமுக நடிகை பலாத்கார வழக்கில் தலைமறைவாக உள்ள நடிகர் விஜய் பாபுவை கைது செய்ய உதவுமாறு கூறி, பல்வேறு நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களுக்கு கொச்சி போலீஸ் கடிதம் அனுப்பியுள்ளது. மலையாள புதுமுக நடிகையை பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபுவை கைது செய்ய கொச்சி போலீஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்ட உடனே அவர் துபாய்க்கு தப்பித்து சென்றார். விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி கொச்சி போலீசார் அவருக்கு பலமுறை இமெயில் மூலம் நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
அவர் ஜார்ஜியா தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் தப்பித்துச் சென்றது ஜார்ஜியா நாட்டுக்கா அல்லது அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா மாகாணத்திற்கா என்று இது வரை உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், விஜய் பாபுவை கைது செய்ய வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியை நாட கொச்சி போலீசார் தீர்மானித்துள்ளனர். விஜய் பாபுவின் பயண விவரங்கள் குறித்த விவரங்களை தருமாறு கூறி பல்வேறு நாட்டு தூதரகங்களுக்கு கொச்சி போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜு கூறும்போது, ‘நடிகர் விஜய் பாபு சட்டத்தை மதிக்க வேண்டும். அவர் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்யப்படுவது உறுதி. இதுதொடர்பாக மிக தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார். இதற்கிடையே விஜய் பாபு கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.
Tags:
Actor Vijay Babu arrested letter from foreign embassy Kerala police நடிகர் விஜய் பாபு கைது வெளிநாட்டு தூதரக கேரள போலீஸ் கடிதம்மேலும் செய்திகள்
3000 மெட்ரிக் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது இந்தியா
மனைவி பிரசவத்திற்கு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் இளம்பெண் மீதான மோகத்தில் ரூ.6 கோடியை இழந்த வங்கி மேலாளர்
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடியிடம் ஆதரவு கோரிய யஷ்வந்த் சின்கா
கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது
திருப்பதி கோயிலில் ரூ.4.30 கோடி காணிக்கை
மகாராஷ்டிராவில் உச்சக்கட்ட குழப்பம்: சிவசேனாவின் ஆட்சி, சின்னம் பறிபோகும் அபாயம்; இன்று மீண்டும் கூடியது செயற்குழு கூட்டம்; என்ன செய்ய போகிறார் முதல்வர் உத்தவ் தாக்கரே
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!