மகளை கடத்தி திருமணம் செய்ததால் மாப்பிள்ளையின் தாய் வெட்டிக் கொலை பெண்ணின் தந்தை கைது
2022-05-22@ 01:43:29

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கிழக்கு அபிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ராக்கு(60). இவரது மகன் வினீத்(25). இவரும் அப்பகுதியைச் சேர்ந்த கண்ணாயிரத்தின் 21 வயதான மகளும் காதலித்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 15 தினங்களுக்கு முன்பு கண்ணாயிரம் தனது மகளை காணவில்லை என்று அபிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அப்போது வினீத், காதலியை அழைத்துச் சென்று வெளியூரில் வைத்து திருமணம் செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கண்ணாயிரம், வினீத்தின் வீட்டுக்கு சென்று, அவரது தாயார் ராக்குவிடம் மகளை கடத்தி சென்றது பற்றி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அரிவாளால் அவரை வெட்டி கொலை செய்தார். இதுபற்றி அபிராமம் போலீசார் வழக்குப்பதிந்து கண்ணாயிரத்தை கைது செய்தனர்.
Tags:
Daughter kidnapped married groom's mother murdered girl's father arrested மகளை கடத்தி திருமணம் மாப்பிள்ளை தாய் வெட்டிக் கொலை பெண்ணின் தந்தை கைதுமேலும் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
செங்கல்பட்டு அருகே பெண்ணை கடத்தி, மது குடிக்க வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்: ஒருவர் கைது; 3 பேருக்கு வலை
பந்தலூர் பகுதியில் கோவில் உண்டியலை உடைத்த கொள்ளையன் கைது
கடன் வாங்கிய பணத்தை திரும்ப கேட்டு மனைவியை தகாத வார்த்தையால் பேசியதால் வாலிபரை கொலை செய்தோம்-கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்
தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நடந்த 83 பவுன் தங்க நகை கொள்ளையில் 2 தனிப்படைகள் விசாரணை-கைரேகைகள் சிக்கின
அண்ணாசாலையில் பைக்கில் சென்றவரை வழிமறித்து ரூ.20 லட்சம் கொள்ளை: போலீஸ் விசாரணை
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!