சொத்து குவிப்பு வழக்கு முன்னாள் முதல்வர் சவுதாலா குற்றவாளி
2022-05-22@ 01:41:33

புதுடெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகன் ஓம் பிரகாஷ் சவுதலா. இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவரான இவர், கடந்த 1999ம் ஆண்டு முதல் 2004 வரை அரியானா மாநில முதல்வராக பதவி வகித்தார். அப்போது, தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து, வருமானத்துக்கு அதிகமாக ரூ.6.10 கோடி சொத்து குவித்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், கடந்த 2010ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு அளித்துள்ளது. அதில், ஓம் பிரகாஷ் சவுதாலா உள்ளிட்டோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 26ம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக சிபிஐ நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Tags:
Property accumulation case former Chief Minister Chaudhary convicted சொத்து குவிப்பு வழக்கு முன்னாள் முதல்வர் சவுதாலா குற்றவாளிமேலும் செய்திகள்
டெய்லர் கொலையை தடுக்கத் தவறியதாக உதய்பூர் தன்மண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்
தப்பிக்குமா உத்தவ் தாக்கரே அரசு!: ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது சிவசேனா..!!
சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலையில் வெளியீடு: ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் தகவல்..!!
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா ... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியது; அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!!
மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, நாளை மாலை 5 மணிக்குள் சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் ஆணை!!
ராஜஸ்தானில் டெய்லர் படுகொலை.. மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமைகளை ஏற்க முடியாது: ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனம்!!
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!