SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பஞ்சு, நூல் விலை சீராகும் வரை 400 நூற்பாலைகளில் உற்பத்தி நிறுத்தம்: தினமும் ரூ. 500 கோடி இழப்பு

2022-05-22@ 01:28:24

பீளமேடு: பஞ்சு, நூல் விற்பனை விலை சீராகும் வரை தமிழகம் முழுவதும் 400 நூற்பாலைகளில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் தினமும் ரூ.500 கோடிக்கு இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக வரலாறு காணாத வகையில் பஞ்சு விலை உயர்வை சிறு நூற்பாலைகள் சந்தித்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் 356 கிலோ கொண்ட ஒரு கண்டியின் விலை ரூ.75 ஆயிரம் ஆக இருந்தது. ஆனால் தற்போது பஞ்சின் விலை சராசரியாக ரூ. 1 லட்சத்து 15 ஆயிரமாக உள்ளது. அதே போல கடந்த ஜனவரியில் ஒரு கிலோ நூலின் விலை ரூ.328 ஆக இருந்தது. தற்போது ஒரு கிலோ நூலின் விலை ரூ.389 ஆக உள்ளது. இதை கணக்கிடும் போது சிறு நூற்பாலைகளுக்கு ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.60 வரை நஷ்டம் ஏற்படுகிறது. பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த பிரச்னை குறித்து தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத் தலைவர் ஜெ.செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பருத்தி சீசன் ஆரம்பித்தவுடன் பெரிய பஞ்சு வியாபாரிகளும், பன்னாட்டு  நிறுவனங்களும் அதிக அளவில் பஞ்சை கொள்முதல் செய்து இருப்பு வைத்துக் கொண்டார்கள். மேலும் வெளிநாட்டிற்கும் பஞ்சு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இப்போது பஞ்சு விலை கடுமையாக உயர்ந்து விட்டதால் எங்களது உறுப்பினர்களால் பஞ்சை கொள்முதல் செய்ய முடியவில்லை.

பல சிறு நூற்பாலைகளின் நடப்பு மூலதனம் முற்றிலும் கரைந்து உள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலையில், பஞ்சு மற்றும் நூல் விற்பனை விலை சீராகும் வரை சிறு நூற்பாலைகளை இயக்குவதில்லை என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. இதனால் உற்பத்தி  நிறுத்தப்படுகிறது. மேலும் இனி பஞ்சு கொள்முதல் செய்வதில்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு செல்வன் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 400 நூற்பாலைகளில் உற்பத்தி நிறுத்தப்படுகிறது. பஞ்சு இருப்பு வைத்திருக்கும் ஆலைகளில் மட்டும்  உற்பத்தி இருக்கும் என்றும் பஞ்சு இருப்பு தீர்ந்த பின்னர் அந்த நூற்பாலைகளிலும் உற்பத்தி நிறுத்தப்படும். இதனால் தினமும் ரூ.500 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று நூற்பாலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tailllo111

    நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

  • glass-park-29

    ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

  • america_tra11

    அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

  • asaam_rain

    அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

  • tour-28

    ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்