பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் தலைமையில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
2022-05-22@ 01:26:35

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பெரும்பாக்கத்தில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் உலகளாவிய வீட்டு வசதி தொழில்நுட்பமான முன் மாதிரி வடிவமைக்கப்பட்ட கட்டிட முறையில் அனைத்து வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனை குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் அளித்த பேட்டி: அனைத்து வசதிகளுடன் கூடிய 1,152 குடியிருப்புகள் ரூ.116.37 கோடி செலவில் தலா 96 குடியிருப்புகள் கொண்ட 12 கட்டிட தொகுப்புகளில் தரைத்தளம் மற்றும் 5 தளங்களாக கட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு குடியிருப்பிற்கும் ஒன்றிய அரசின் மானியம் ரூ.5.50 லட்சம், மாநில அரசின் மானியம் ரூ.3.50 லட்சம், பயனாளிகளின் பங்களிப்பு தொகை ரூ.1.50 லட்சமும் ஆக மொத்தம் குடியிருப்பு ஒன்றிக்கு ரூ.10.50 லட்சங்கள் செலவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடியிருப்பும் தலா 406 சதுர அடி பரப்பளவு கொண்டது. இந்த திட்டப்பகுதியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வருகிற 26ம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புகளை வழங்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Perumbakkam flats Chief Minister Chief Prime Minister Modi opens Minister Thamo Anparasan பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு முதல்வர் தலைமை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்மேலும் செய்திகள்
சேத்தியாத்தோப்பு பேருந்து நிறுத்த பகுதியில் குடிமகன்கள் அட்டகாசம்: பயணிகள் அவதி
காலில் லுங்கி மாட்டி கீழே விழுந்தவர் பலி
பாம்பன் குமரகுருதாசர் சுவாமிகள் கோயிலில் குடமுழுக்கு விரைவில் நடைபெறும்; அமைச்சர் சேகர்பாபு தகவல்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை, இனி நான் தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி டுவிட்டர் பக்கம் மாற்றம்
ஆட்டோவில் தவறவிட்ட ரூ. 1.50 லட்சம் ஒப்படைப்பு; டிரைவருக்கு பாராட்டு
மருத்துவமனையில் உள்ள சகோதரனை பார்க்க அனுமதி மறுப்பு, போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற; போதை வாலிபர்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்