நெடுஞ்சாலை பணிகளில் குறைபாடுகளை களையும் வகையில் சென்னையில் சாலை, வடிகால் பணிகளை உள்தணிக்கை குழு திடீர் ஆய்வு: அமைச்சர் எ.வ.வேலு உத்தரவால் அதிரடி நடவடிக்கை
2022-05-22@ 01:21:54

சென்னை: சென்னையில் நடந்து வரும் சாலை, வடிகால் பணிகளை உள்தணிக்கை குழு திடீர் ஆய்வு மேற்கொண்டது. இதுதொடர்பான அறிக்கை அரசுக்கு அனுப்பப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ளப்படும் பணிகளில் உள்ள குறைபாடுகளை களைய உள் தணிக்கை என்ற புதிய நடைமுறை நெடுஞ்சாலைத்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த தணிக்கையை மேற்பார்வையிட கண்காணிப்பு பொறியாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 4 உதவி கோட்ட பொறியாளர்கள், 8 உதவி பொறியாளர்கள் இடம்பெறுகின்றனர்.
இந்த குழு சாலை பணிகள் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்கிறது. தேவைப்பட்டால் இந்த குழு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் உள்தணிக்கை செய்து, அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பொறியாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலை, வடிகால் மற்றும் பாலப்பணிகளை நெடுஞ்சாலைத்துறையின் பெருநகர சென்னை அலகு பிரிவு கண்காணிப்பு பொறியாளர் செல்லத்துரை தலைமையிலான பொறியாளர்கள் குழு உள் தணிக்கை குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த குழுவினர், ஜிஎஸ்டி சாலை, ஜவஹர்லால் நேரு சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளையும், பல்லாவரம்- துரைப்பாக்கம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெரிய வடிகால் பணிகளின் தரத்தையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, இதுதொடர்பான அறிக்கை அரசுக்கு அனுப்பப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:
Highway work defect Chennai road drainage work internal audit committee inspection Minister E.V.Velu நெடுஞ்சாலை பணி குறைபாடு சென்னை சாலை வடிகால் பணி உள்தணிக்கை குழு ஆய்வு அமைச்சர் எ.வ.வேலுமேலும் செய்திகள்
மழைநீர் வடிகால் திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ2,25,000 அபராதம்: மாநகராட்சி நடவடிக்கை
மின்வாரிய ஆள்தேர்வு அறிவிக்கை ரத்தால் படித்த இளைஞர்களின் எதிர்காலம் பாதிப்பு; உடனடியாக தேர்வு நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
தனியார் ஓட்டலில் கெட்டுப் போன இறால், மட்டன், மீன், சிக்கன் பறிமுதல்: அண்ணாநகரில் பரபரப்பு
துரைப்பாக்கம், ஒக்கியம்பேட்டையில் ரூ257 கோடியில் பாதாள சாக்கடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
வேளச்சேரியில் மின்சாரம் பாய்ந்து; தூய்மை பணியாளர் பலி!
வியாசர்பாடியில் 800 ஆண்டு பழமை வாய்ந்த இரவீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!