ஆண்டுக்கணக்கு தாக்கல் செய்யாத சங்கங்களிடம் ரூ.10 கோடி அபராதம் வசூல்: கடந்தாண்டு மட்டும் புதிதாக 2,714 சங்கங்கள் பதிவு
2022-05-22@ 01:21:06

சென்னை: ஆண்டுக்கணக்கு தாக்கல் செய்யாத சங்கங்களிடம் அபராதம் வசூலித்ததன் மூலம் ரூ.10 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கல்வி, இலக்கியம், அறிவியல் மற்றும் பிற பிரிவுகள் தொடர்புடைய அமைப்புகளை சங்கங்களாக பதிவு செய்ய தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம் வழிவகுக்கிறது. அதன்படி கூட்டுறவு சங்கம், குடியிருப்போர் சங்கம், அரசு ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட எந்த சங்கமாக இருந்தாலும் இந்த சட்டத்தில் பதிவு செய்யப்படுகிறது. இந்த சட்டத்தின் கீழ் 7 பேருக்கு குறையாமல் உறுப்பினர்களை கொண்ட இந்த சங்கத்தை மாவட்ட பதிவாளரிடம் பதிவு செய்து கொள்ளலாம்.
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த சங்கங்களின் செயற்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒரு முறையாவது பொதுக்குழு கூட்டத்தை நடத்தி தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகளை சங்க பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்று மாவட்ட பதிவாளரிடம் கோர்வை செய்ய வேண்டும். ஆனால், மாநிலத்தில் பெரும்பாலான சங்கங்கள் ஆண்டறிக்கையை சமர்ப்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்தன. இதுதொடர்பாக மாவட்ட பதிவாளர்கள் சார்பில் ஒவ்வொரு சங்கங்களுக்கு தனித்தனியாக கடிதம் எழுதப்பட்டது.
இதை தொடர்ந்து பல சங்கங்களிடம் ஆண்டறிக்கைகள் ஆய்வுக்கான கட்டணம் ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. அதோடு அவர்களிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டது. மேலும், இந்த சங்கங்கள் தங்களது பதிவை புதுப்பிப்பதற்காக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டன. இதன் மூலம், கடந்தாண்டில் மட்டும் ரூ.9.98 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்நிலையில், கடந்தாண்டில் 2,714 சங்கங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 2 லட்சத்து 16 ஆயிரத்து 823 சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்: தாராபுரத்தில் பரபரப்பு
ஆவடி திமுக அலுவலகத்தில் உள்கட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல்: அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்பு
சுகாதார மையத்தை தரம் உயர்த்த வேண்டும்; மக்கள் வலியுறுத்தல்
மெட்ரோ ரயில் பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு தொழிலாளி பலி: போலீசார் விசாரணை
திருவேற்காடு நகராட்சியில் ரூ. 2.17 கோடியில் சாலை, குளம் தூர்வாரும் பணிகள்: அமைச்சர் சா.மு.நாசர் துவக்கினார்
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;