SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெடுஞ்சாலை, ரயில்வே திட்டத்தை தொடங்கி வைக்கிறார்; சென்னையில் வரும் 26ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் விழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு

2022-05-21@ 21:00:48

மீனம்பாக்கம்: நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க வரும் 26ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியின் பயண திட்டம் குறித்து ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பிரதமர் மோடி சென்னையில் வரும் 26ம் தேதி நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக அன்று மாலை 5.10 மணிக்கு தனி விமானத்தில் வருகை தருகிறார். பின்னர் இரவு 7.40 மணிக்கு டெல்லி திரும்புகிறார். பிரதமர்  மோடி சென்னைக்கு ஒரு நாள் பயணமாக வரும் 26ம் தேதி வருகை தருகிறார். சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் விழாவில், தேசிய நெடுஞ்சாலை புதிய திட்டங்கள், ரயில்வே புதிய திட்டங்கள் உட்பட ஒன்றிய அரசின் பல்வேறு புதிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து பேசுகிறார்.

இதற்காக வரும் 26ம் தேதி மாலை ஐதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5.10  மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்துக்கு வருகிறார். அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் 5.15 மணிக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஐஎன்எஸ் அடையாறு செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் விழா நடக்கும் நேரு ஸ்டேடியத்திற்கு செல்கிறார். விழா முடிந்ததும் மீண்டும் காரில் புறப்பட்டு ஐஎன்எஸ் அடையாறு வருகிறார். அங்கிருந்து இந்திய விமான படை ஹெலிகாப்டரில் இரவு 7.30 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். பிரதமருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி சென்னை பழைய விமான நிலையத்தில் நடக்கிறது. அது முடிந்ததும் பிரதமர் இரவு 7.40 மணிக்கு இந்திய விமானப்படை விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

பிரதமரின் பயண திட்டம் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, டெல்லியில் இருந்து பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள், நேற்று மாலை சென்னை வந்தனர். பழைய விமான நிலையத்தை ஆய்வு செய்தனர். நேரு ஸ்டேடியத்திற்கு காரில் சென்றால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், ஹெலிகாப்டர் பயணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். ஆனால் சென்னை நகரில் தற்போது அவ்வப்போது சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் சாலை வழியையும் தயார் நிலையில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பிரதமரின் உத்தேச பயணத்திட்டம் தான் என்றும், உறுதியான பயண திட்டம் ஓரிரு தினங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • tour-28

    ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

  • ukrainmaalll11

    உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

  • same-sex-27

    மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!

  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்