தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 46 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை; 40 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
2022-05-21@ 19:25:52

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 37 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் இன்று புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 34 லட்சத்து 54 ஆயிரத்து 847 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால் இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 025 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 321 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 40 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதுவரையில் 34 லட்சத்து 16 ஆயிரத்து 501 பேர் குணம் அடைந்து உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 25 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஜூலை 11-ல் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோர மீண்டும் நீதிமன்றத்தை நாட ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்
ஓய்வு பெற்ற கோயில் பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரருக்கு பணிக்கொடையை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சர்வதேச அளவில் தமிழகம் அனைவராலும் உற்றுநோக்கக்கூடிய ஒரு மாநிலமாக மாறப் போகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் : அன்புமணி நம்பிக்கை
ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்: பல்லாவரம் அருகே பரபரப்பு
நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்கம், மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.50 லட்சம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!