வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்: அரியானாவில் பயங்கரம்
2022-05-21@ 17:17:21

குர்கிராம்: அரியானாவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை, அதேபகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரியானா மாநிலம் குர்கிராமை சேர்ந்த 13 வயது சிறுமி அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தான். அப்போது அவனது நண்பனான 15 வயது சிறுவன், வீட்டின் அறையை பூட்டிவிட்டு வெளியில் நின்றிருந்தான். பாதிக்கப்பட்ட சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அவரது பெற்றோர் அங்கு சென்றபோது, வெளியே நின்ற சிறுவனும், சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவனும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், குர்கிராம் போலீசார் வழக்குபதிந்து, சிறுவர்கள் இருவரையும் கைது செய்து, பரிதாபாத் மாவட்ட குழந்தைகள் நல சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னதாக, கடந்த சில வாரங்களுக்கு முன் பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரி குளித்துக் கொண்டிருந்த போது, அத்துமீறி குளியலறைக்குள் 17 சிறுவன் நுழைந்துள்ளான். அப்போது அவனை பிடித்து சிறுமியின் பெற்றோர் எச்சரித்து அனுப்பி உள்ளனர். தற்போது மீண்டும் அவர்களது வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ததில், அவரை பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ெதாடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.
மேலும் செய்திகள்
மின்சார சைக்கிள்களின் விலை ரூ.15 ஆயிரம் வரை குறைப்பு: ஹீரோ நிறுவனம் முடிவு
“திரௌபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்?” என ட்விட்டரில் பதிவிட்ட இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு
ஜூலை 11ம் தேதி திட்டமிட்டபடி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தேசிய தேர்வு முகமை திட்டவட்டம்..!
மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து... 8 பேர் உயிருடன் மீட்பு.. ஒருவர் பலி... 11 பேர் காயம்
மத உணர்வை தூண்டியதாக பத்திரிகையாளர் கைது... உண்மையின் ஒரு குரலை கைது செய்வது இன்னும் 1000 குரல்களை எழுப்பும் என ராகுல் கண்டனம்!!
இந்தியாவில் வீரியமாக பரவும் கொரோனா...ஒரே நாளில் பாதிப்பு 11,793 ஆக பதிவு... 24 மணி நேரத்தில் 27 பேர் பலி!! ..
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!