கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகையின் சூட்கேஸ் மாயம்: நகைகள் தப்பியதால் நிம்மதி
2022-05-21@ 16:58:10

கேன்ஸ்: கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை பூஜா ஹெக்டேவின் சூட்கேஸ் மாயமான நிலையில், அவரது நகைகள் தப்பியதால் அவர் நிம்மதி அடைந்துள்ளார். பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவின் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் தெலுங்கு பட நடிகையான பூஜா ஹெக்டேவும் முதன்முறையாக இந்த விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவர் தனது அசத்தலான பாணியில் ஆடைகளை அணிந்து கலக்கினார். ஆனால், அவருக்கு சோகமான சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. ஃபிலிம் கம்பேயனுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘என்னுடைய அலங்கார ஒப்பனை பொருட்கள், உடைகள் அனைத்தையும் சூட்கேசில் வைத்திருந்தேன். கேன்ஸ் விழாவில் பங்கேற்கும் முன், எல்லா பொருட்களும் எங்களுடன் இருந்தது.
ஆனால், உடைகள் இருந்த சூட்கேஸ் எங்கே போனது என்பது தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக நான் கொண்டுவந்த நகைகள் அனைத்தையும் அணிந்திருந்ததால், அவை தப்பின. என்னுடன் வந்த எனது குழுவினர் பதற்றமாகவே இருந்தனர். அவர்களை எவ்வளவோ சமாதானப்படுத்தினேன். ஒரே குழப்பமான சூழ்நிலையில் இருந்தோம். காலை, மதியம் உணவு கூட சாப்பிடவில்லை. பகலில் சாப்பிட வேண்டிய உணவை இரவில் சாப்பிட்டேன். எனது சிகையலங்கார நிபுணர், மயக்கம் அடையும் நிலையில் இருந்தார். எப்படி எனது சூட்கேஸ் மாயமானது என்பது தெரியவில்லை’ என்றார்.
மேலும் செய்திகள்
ஆந்திராவில் காரில் ரகசிய அறை அமைத்து கடத்தல் ₹5.80 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்-விஜயவாடா சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி
ஆந்திராவில் முதல் முறையாக 5 மாடி கட்டிடத்துக்கு சோலார் தகடுகள் அமைப்பு-100 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி
வெடுருகுப்பம் மண்டலம் போடபண்டத்தில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்-கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் தாய் மடி திட்டம் சமுதாயத்தை மாற்றும் ஆற்றல் கல்விக்கு மட்டுமே உள்ளது-முதல்வர் ஜெகன்மோகன் பேச்சு
மின்சார சைக்கிள்களின் விலை ரூ.15 ஆயிரம் வரை குறைப்பு: ஹீரோ நிறுவனம் முடிவு
“திரௌபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்?” என ட்விட்டரில் பதிவிட்ட இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!