கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ விபத்து: கண் எரிச்சல், சுவாசக்கோளாறால் மக்கள் அவதி
2022-05-21@ 01:35:59

பெரம்பூர்: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர் உள்ளிட்ட 8 மண்டலங்களில் இருந்து தினசரி சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு மலைபோல் தேங்கியுள்ள குப்பை கழிவுகளால் சுற்றுப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இந்த குப்பை கிடங்கில் நேற்று பிற்பகல் 12 மணிக்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
மளமளவென தீ பரவி அப்பகுதியில் உள்ள குப்பை கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. இதனால் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலமாக மாறியது. வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்தனர். தகவலறிந்து கொருக்குப்பேட்டை, சத்தியமூர்த்தி நகர், எம்.கே.பி.நகரில் இருந்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த 20க்கும் மேற்பட்ட வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட இடத்தை வடக்கு வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், ராயபுரம் மண்டல அலுவலர் மதிவாணன், பெரம்பூர் எம்எல்ஏ, ஆர்.டி.சேகர், 37வது வார்டு கவுன்சிலர் டில்லிபாபு ஆகியோர் பார்வையிட்டனர். தீ விபத்து காரணமாக சுற்றியுள்ள கொடுங்கையூர், எம்.கே.பி.நகர், வியாசர்பாடி ஆகிய பகுதி மக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டனர்.
மேலும் செய்திகள்
கரூருக்கு 2ம் தேதி முதல்வர் வருகை: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
அக்கரம்பாக்கம் ஊராட்சியில் நடுநிலைப்பள்ளிக்கு சமையல் அறை கட்டிடம் கட்ட வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை அரசு ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம்: கலெக்டர் தகவல்
சவுடு மண் கடத்திய பாஜ பிரமுகர் கைது: 2 லாரிகள் பறிமுதல்
அரசு நிலம் ஆக்கிரமிப்பை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்
ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களின் டயர், உதிரி பாகங்கள் திருட்டு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!