நெல்லை கல்குவாரியில் 3 பேர் பலியான சம்பவத்தில் கர்நாடகாவில் தங்கியிருந்த உரிமையாளர், மகன் கைது: நெல்லை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்
2022-05-21@ 01:29:11

நெல்லை, மே 21: நெல்லை கல்குவாரி நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியான சம்பவத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த குவாரி உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோர் கர்நாடக மாநிலம் மங்களூரில் விடுதியில் தங்கியிருந்த போது தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தனர். நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமதிப்பான்குளம் கல்குவாரியில் கடந்த 14ம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தென் மண்டல ஐஜி அஸ்ரா கர்க் உத்தரவின் பேரில் மாவட்ட எஸ்பி சரவணன் பரிந்துரையின் படி நாங்குநேரி ஏஎஸ்பி ரஜத் சதுர்வேதி விசாரணை நடத்தி வருகிறார்.
முன்னீர்பள்ளம் போலீசார் விபத்து தொடர்பாக கல்குவாரி உரிமையாளரான திசையன்விளையைச் சேர்ந்த செல்வராஜ், அவரது மகன் குமார், லைசென்ஸ்தாரர் சங்கரநாராயணன், மேலாளர் ஜெபஸ்டின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் லைசென்ஸ்தாரர் சங்கரநாராயணன், மேலாளர் ஜெபஸ்டின் ஆகியோரை தனிப்படை போலீசார் ஏற்கெனவே கைது செய்தனர். செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தனர். அவர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வந்தது. அவர்கள் இருவரும் வெளிமாநிலம் தப்பிச் சென்று விட்டதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவல் கிடைத்தது.
இதையடுத்து கேரளா, கர்நாடக மாநிலத்துக்கு தனிப்படைகள் விரைந்தன. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பதுங்கியிருந்த செல்வராஜ் செல்போன் மூலம் உறவினர்களிடம் பேசியதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து செல்போன் சிக்னல் மூலம் மங்களூரில் லாட்ஜில் தங்கியிருப்பதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் மங்களூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகிய இருவரையும் நேற்று மாலை கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் இன்று நெல்லைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.
மேலும் செய்திகள்
அரியலூரில் விமானம் விழுந்ததாக வதந்தி
திருவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ஆனி சுவாதி திருவிழா; கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
ஓட்டப்பிடாரம் அருகே பரபரப்பு, ஆம்னி பஸ் எரிந்து சேதம்; பயணிகள் உயிர் தப்பினர்
ராஜபாளையத்தில் அதிகாலை பரபரப்பு ஹார்டுவேர்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து; ரூ.80 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
பழனியில் இருந்து கோவைக்கு மின்சார ரயில் சோதனை ஓட்டம்!
நாகர்கோவில் மாநகராட்சியில் 8 இடங்களில் பூங்கா
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;