குழாய் மாற்றியமைக்கும் பணி காரணமாக கொடுங்கையூரில் 23ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: வாரியம் அறிவிப்பு
2022-05-21@ 01:24:09

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாதவரம் பால் பண்ணை சாலையில் மெட்ரோ ரயில் நிலையப் பணிகளுக்காக புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குழாய்கள் மாற்றி இணைக்கும் பணிகள் வரும் 23ம் தேதி காலை 8 மணி முதல் 24ம் தேதி அதிகாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, பகுதி-3க்கு உட்பட்ட விநாயகபுரம், பொன்னியம்மன்மேடு, பகுதி-4க்கு உட்பட்ட கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, பெரம்பூர் (பகுதி), வியாசர்பாடி, பட்டேல் நகர், புதுவண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை மற்றும் பகுதி-6க்கு உட்பட்ட பெரம்பூர் மற்றும் புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு 24ம் தேதி மாலை முதல் இப்பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும். மேலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள பகுதி-3 பொறியாளரை 8144930903 என்ற எண்ணிலும், பகுதி-4 பொறியாளரை 8144930904 என்ற எண்ணிலும், பகுதி-6 பொறியாளரை 8144930906 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கரூருக்கு 2ம் தேதி முதல்வர் வருகை: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
அக்கரம்பாக்கம் ஊராட்சியில் நடுநிலைப்பள்ளிக்கு சமையல் அறை கட்டிடம் கட்ட வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை அரசு ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம்: கலெக்டர் தகவல்
சவுடு மண் கடத்திய பாஜ பிரமுகர் கைது: 2 லாரிகள் பறிமுதல்
அரசு நிலம் ஆக்கிரமிப்பை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்
ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களின் டயர், உதிரி பாகங்கள் திருட்டு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!