ஆலங்காயம் அருகே 20 நாட்களாக திரிந்த ஒற்றை யானை காட்டிற்குள் விரட்டியடிப்பு
2022-05-20@ 19:19:36

லங்காயம்: திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த காவலூர் மற்றும் நாயக்கனூர் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து கடந்த 20 நாட்களுக்கு முன் ஒற்றை யானை வெளியேறியது. இந்த யானை அவ்வப்போது விளைநிலங்களில் இறங்கி செல்வதால் அங்கிருந்த விவசாய பயிர்கள் தொடர்ந்து சேதமாகி வந்தது. பயிர் சேதமானதால் வேதனை அடைந்த விவசாயிகள் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் ஆலங்காயம் வனச்சரக அலுவலர் சோமசுந்தரம் தலைமையில் 12க்கும் மேற்பட்ட வனத்துறையினர் நேற்று முதல் 4 குழுக்களாகப் பிரிந்து, நாயக்கனூர், கிருஷ்ணாபுரம் பகுதிகளுக்கு சென்று ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர் முயற்சியால் இன்று அதிகாலை ஆலங்காயம் மலை ரெட்டியூர் காப்புக்காட்டிற்குள் யானையை விரட்டியடித்தனர். விவசாய நிலத்தில் திரிந்த யானை விரட்டியடிக்கப்பட்டதால் விவசாயிகள் நிம்மதியடைந்தனர்.
மேலும் செய்திகள்
கொடைக்கானலில் பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட புதுவிதமான அறை: சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு..!!
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பருத்தி விவசாயிகள் போராட்டம்: பருத்திக்கு உரிய விலை கேட்டு சாலை மறியல்..!
வெளிவரும் பண்டைய தமிழர்களின் பயன்பாடு!: கீழடியில் இரு வண்ண சுடுமண் கிண்ணங்கள் கண்டெடுப்பு..!!
கொடநாடு கொலை விவகாரம் ஜெயலலிதா டிரைவர் கனகராஜ் மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்து மானபங்கம்: 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு; கொழுந்தன் கைது
பைக் மீது லாரி மோதி 4 பேர் பலி
பண்ருட்டியில் கொரோனாவால் தாய் உயிரிழப்பு பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த ஊர்மக்கள்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!