தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் சீன தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு தடை
2022-05-20@ 17:43:58

டொராண்டோ: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நெட்வொர்க் சேவைகளை வழங்குவதால், சீன தொலைதொடர்பு நிறுவனங்களின் சேவைக்கு தடை விதிக்கப்படுகிறது என்று கனடா அமைச்சர் தெரிவித்தார். அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய், அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அதனை தடை செய்தன.
இந்நிலையில் கனடா தொலைதொடர்பு அமைச்சர் ஃபிராங்கோயிஸ் பிலிம் கூறுகையில், ‘சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஹூவாய் மற்றும் இசட்டிஇ ஆகியவற்றின் 5ஜி மற்றும் 4ஜி வயர்லெஸ் வசதிகளுக்கு கனடா அரசு தடை செய்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், அதன் ெநட்வொர்க் சேவைகள் உள்ளன. அதனால், ஏற்கனவே இந்த வசதியை பெற்றுள்ள கனடா நிறுவனங்கள், தங்களது இந்தச் சேவையை முடக்க வேண்டும்.
மேலும், அதன் சாதனங்களை அகற்ற வேண்டும். இதற்கான கால அவகாசம் வரும் ஜூன் 28ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, தற்போதுள்ள 4ஜி நெட்வொர்க்கின் உபகரணங்களை வரும் 2027ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் அகற்ற வேண்டும். இந்த நிறுவனங்களுக்கு அரசின் சார்பில் எந்த நிதி உதவியும் வழங்கப்படாது’ என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 46 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்; ஜி7 அமைப்பு கண்டனம்!!
காரில் அமர்ந்திருந்த இந்திய வாலிபர் சுட்டுக் கொலை: அமெரிக்காவில் பயங்கரம்
பள்ளி, நிறுவனங்கள் மூடல் இலங்கையில் சுத்தமாக காலியாகும் பெட்ரோல்: ஒட்டுமொத்த நாடே முடங்குகிறது
100 ஆண்டுகளில் முதல் முறையாக வெளிநாட்டு கடனை செலுத்த முடியாமல் தவிக்கும் ரஷ்யா: உக்ரைன் போரால் பாதிப்பு
பருவநிலை தொடர்பான இந்தியாவின் முயற்சிக்கு ஜி7 நாடுகள் ஆதரவு தர வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!