நீடிக்கும் பொருளாதார நெருக்கடி!: இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்பு..!!
2022-05-20@ 14:21:59

கொழும்பு: இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். மாதத்திற்கும் மேல் மக்களின் போராட்டம் நீடித்து வருகிறது. கடந்த 9ம் தேதி போராட்டக்காரர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் கொழும்பு முழுவதும் வன்முறை பரவியது. தொடர்ந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். 4வது முறையாக இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுள்ளார். இருப்பினும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி காலேவில் போராட்டம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
அதன்படி, துறைமுகங்கள் கப்பல்கள், விமான சேவைத்துறை அமைச்சராக நிமல் சிறிபால டிசில்வா பதவியேற்றுள்ளார். கல்வித்துறை அமைச்சராக சுசில் பிரேமஜயந்த, சுகாதாரத்துறை அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல-வும் பதவியேற்றுக்கொண்டனர். தொடர்ந்து விஜேதாச ராஜபக்சே நீதித்துறை அமைச்சராகவும், ஹரீன் பெர்ணாண்டோ சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். ரமேஷ் பத்திரண, மனுஷ நாணயக்கார, நவீன் பெர்ணாண்டோ, டிரான் அலஸ் ஆகியோரும் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில் அந்நாட்டின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே சில நாட்களுக்கு முன் பதவியேற்றுக்கொண்டார். ஏற்கனவே 4 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் தற்போது மேலும் 9 பேர் பதவியேற்றுள்ளனர்.
மேலும் செய்திகள்
பாகிஸ்தானில் தொடர் மின்வெட்டு; மக்கள் சாலை மறியல் போராட்டம்
இங்கிலாந்தில் 1,076 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு
உக்ரைனில் பல்பொருள் அங்காடி மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்ய அதிபர் புதின் ஒரு பயங்கரவாதி: ஜெலன்ஸ்கி சாடல்
கனடாவில் பயங்கரம்; வங்கிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த 2 மர்ம நபர்கள் சுட்டுக்கொலை: போலீசார் அதிரடி
கொலம்பியா நாட்டில் உள்ள சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 கைதிகள் உடல் கருகி உயிரிழப்பு..பலருக்கு பலத்த தீக்காயம்!!
லாரியில் அடைக்கப்பட்ட 51 அகதிகள் மூச்சுத் திணறி பலியான சம்பவம்... இதயத்தையே நொறுக்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோபிடன் வேதனை!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;