SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏகப்பட்ட ஆட்கள் கட்சியில் சேர வர்றாங்க என பில்டப் கொடுத்து ஏமாற்றிய தாமரை கட்சி நிர்வாகிகளை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

2022-05-20@ 01:04:00

‘‘மாங்கனி மாவட்டத்தில் தாமரை கட்சிக்கு ஆள்பிடிக்க நிர்வாகிகள் படாதபாடு படுறாங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. ஏற்கனவே வடமாநில வியாபாரிகளை கட்சியின் உறுப்பினர்கள் என்று அழைத்து வந்து குல்லா போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது சர்ச்சையை கிளப்பிச்சு. இந்த நிலையில் பவர்புல் கட்சியிலிருந்து முக்கியமான நிர்வாகிகள் ஏராளமான பேரு, எங்க கட்சியில் சேரப்போறாங்க என்று அறிவிச்சு, எல்லா ஊடகங்களுக்கும் அழைப்பு விடுத்தாங்களாம். அந்த முக்கிய நிர்வாகிங்க எல்லாம் யாரு என்று அறியும் ஆவலில் ஊடகங்களும் தாமரை கட்சி ஆபீசில்  குறிப்பிட்ட  நேரத்தில் திரண்டாங்களாம். ஆனால் ஆபீசு யாருமில்லாமல் வெறிச்சோடி கிடந்ததாம். இதற்கடுத்த சிறிது நேரத்தில் வாட்ஸ் அப்பில் மீண்டும் ஊடகங்களுக்கு மெசேஜ் ஒன்னு பறந்துச்சாம். தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. அதனால் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டு வேறொரு நாளில் நடக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டதாம். இதுகுறித்து கட்சி மாறப்போறதா சொன்ன சம்மந்தப்பட்ட பார்ட்டி நிர்வாகி ஒருவரிடம் ஊடகத்தினர் கேட்டபோது,  ‘அந்தக்கட்சியில் சேர, எந்தக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்களும் தயாராக இல்லை. அப்படிப்பட்ட நிலையில் எங்க கட்சி முக்கிய நிர்வாகிங்க எப்படிங்க சேருவாங்க? இப்படி எதையாவது கிளப்பிவிட்டு பூச்சாண்டி காட்டுவதே தாமரைக்கட்சிக் காரங்களுக்கு வேலையாப்போச்சுங்க’ என்று சொல்லி பலமாக சிரிச்சாராம்.

‘‘அறவழிப் போராட்ட நிலையென்ன..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பேரறிவாளன் விடுதலையில் தங்களது மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில்  முக்கியமான இடங்களில் வெள்ளைத்துணியால் வாயை கட்டிக்கொண்டு பதாகைகளை ஏந்தி  அறப்போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர்  அழகிரி அறிவித்திருந்தார். குமரி மாவட்டத்தில் மேற்கு பகுதியில் மட்டும்  இது தொடர்பான போராட்டம் நடைபெற்ற வேளையில் கிழக்கு மாவட்டம், நாகர்கோவில்  மாநகர் மாவட்டம் சார்பில் போராட்டம் நடைபெறவில்லை. கடைசியில் முன்னாள்  மாவட்ட தலைவர் தனது ஆதரவாளர்களுடன் வந்து முக கவசம் அணிந்து எதிர்ப்பை  பதிவு செய்துவிட்டு சென்றார். களத்தில் நிற்க வேண்டிய மாவட்ட நிர்வாகிகள்  போராட்டக்களத்தில் இல்லாமல் போனது கட்சியின் விவாத பொருளாக மாறியுள்ளது’’  என்றார் விக்கியானந்தா.

‘‘போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி மணல் கடத்தலா..’’ என ஆச்சர்யத்தோடு கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர்  மாவட்டத்தில் அரசு மணல் குவாரி திறக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மணலை  பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதை பயன்படுத்தி கொண்டு  பாலாற்றில் பல்வேறு இடங்களில் மணல் கடத்தல் தொடங்கி உள்ளது. ஜேசிபி லாரிகளை  பயன்படுத்தி இரவோடு இரவாக மணல் கடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.  குறிப்பாக போலியாக ஆன்லைனில் பில் போட்டு வைத்துக் கொண்டும், மணல் கடத்தும்  வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் பயன்படுத்திக் கொண்டும் மணல் கடத்தல் ஜோராக  நடக்குதாம். இதற்கு உள்ளூர் போலீசார் முக்கிய மூளையாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேலியே பயிரை மேய்வது போல சில போலீசார்  செயல்பட்டு வருகின்றனர். இதை காவல்துறை உயர்அதிகாரிகள் கண்காணித்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது’’ என்றார்  விக்கியானந்தா.

‘‘கல் குவாரி சம்பவத்தால் கலக்கத்தில் இருக்காங்களாமே துறை அதிகாரிகள்’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நெல்லை கல் குவாரி நிலச்சரிவில் 3 உயிர்கள் பலியான சம்பவம் ஆறாத வடுவை  ஏற்படுத்தியுள்ளது. இந்த கல் குவாரி விதிமுறையை மீறி இயங்கி வந்தது உயர்  அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்ததாம். குவாரிக்கான லாரி பெர்மிட்டை கடந்த  ஏப்ரல் மாதமே நிறுத்திய நிலையில் எப்படி கல்குவாரி தொடர்ந்து இயங்கி வந்தது  என்பது தான் சர்ச்சை. மணலை கொண்டு செல்லும் மாட்டு வண்டியை கூட பறிமுதல் செய்யும் அதிகாரிகளுக்கு இந்த லாரிகள் கண்ணுக்கு தெரியவில்லையா, கனிம வளத்துறை அதிகாரிகளின் ஆதரவு இல்லாமல் இது நடக்குமா என்பது தான் கேள்வி. முதல் கட்டமாக நெல்லை மாவட்டத்தின் கனிம வளத் துறை உதவி இயக்குநர்  அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக இருந்த மற்ற  அதிகாரிகளின் பட்டியலும் தயாராகி வருகிறது.  அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை  இருக்குமாம். ஏற்கெனவே மணல் கடத்தலில் சிக்கிய முந்தைய பெண் அதிகாரி  சிறையில் தள்ளப்பட்ட நிலையில், நமக்கு எந்த கதியோ என கனிம வளத் துறை  அதிகாரிகள் கலங்கிப் போய் இருக்கிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

’’கதர்கட்சிக்கு செயல் தலைவர் பதவியாமே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் தள்ளாடிக் கொண்டிருக்கும் கதர் கட்சியை தூக்கி நிறுத்தனும் என சீனியர் தலைவர்கள் எல்லாம் கட்சி தலைமையிடம் கூறினார்களாம். நாங்களும் அதைத்தான் சொல்கிறோம், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்ய வேண்டும். இதற்கான அசைன்மென்ட் மேலிடப்பொறுப்பாளர்களுக்கு வழங்கப்படும். அன்று முதல் தலைவர் பதவியை பிடிக்க சீனியர்- ஜூனியர்கள் இடையே கடும் போட்டியாம். அனந்தமானவரு தலைமையிலான குழு அகில இந்திய தலைவர்களை சந்தித்ததாம். இதில் கடுப்பான சீனியர் தலைகள் தனியாக கிளம்பி போய் கட்சி தலைவர்களை சந்திச்சு ஆலோசனை நடத்தியதாம். கட்சியிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேறு கட்சிக்கு போய்விட்டார்கள். இதுவே கட்சி பலகீனமானதற்கு காரணம். கடந்த காலங்களில் அதிருப்தியாளர்களையும் சரிகட்டப்பாருங்கள் என அறிவுறுத்தியதாம். இதற்கு தலைவர் யார் என்றால் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும் என கோரசாக சொன்னார்களாம். இதற்கிடையே புதுச்சேரி கதர்கட்சிக்கு தலைவர் மட்டுமல்ல, செயல்தலைவர் என்ற புதிய பதவியை உருவாக்க போகிறோம் என்று கூறியிருக்கின்றனர். செயல் தலைவர் இளைஞரான அனந்தமானவரையும், தலைவராக மூத்தவர் லிங்கத்தையும் நியமிக்க ஆலோசிக்கிறதாம் கட்சித் தலைமை’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tailllo111

  நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

 • glass-park-29

  ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

 • asaam_rain

  அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

 • tour-28

  ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்