பஞ்சாப் மாநில மாஜி காங். தலைவர் பாஜ.வுக்கு தாவினார்
2022-05-20@ 01:03:11

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில முன்னாள் தலைவர் சுனில் ஜாகர், ஜே.பி.நட்டா தலைமையில் நேற்று பாஜ.வில் இணைந்தார். கடந்த ஆண்டு பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அம்ரீந்தர் சிங் பதவி விலகிய போது, அடுத்த முதல்வருக்கான பட்டியலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சுனில் ஜாகர் பெயரும் இடம் பெற்றது. ஆனால், அந்த வாய்ப்பு பறிபோனதால், கட்சிக்கு எதிரான கருத்துகளை அவர் கூறி வந்தார்.
இந்நிலையில், பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை கடுமையாக விமர்சித்ததால், 2 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து ஜாகர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த அவர், ‘காங்கிரசுக்கு குட் பாய்,’ என சமூக வலைதளத்தில் கடந்த வாரம் விடியோ மூலம் தெரிவித்தார்.
இந்நிலையில், டெல்லியில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் ஜாகர் நேற்று அக்கட்சியில் இணைந்தார். அப்போது பேசிய நட்டா, ‘அரசியல் வாழ்க்கையில் தனக்கென தனி பெயரை பெற்ற சுனில் ஜாகரை கட்சிக்கு வரவேற்கிறேன். இவர் பஞ்சாப்பில் பாஜ.வை பெரியளவில் வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவார் என நம்புகிறேன்,’ என தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான பேச்சு: கேரள மாஜி அமைச்சர் மீது வழக்கு
கர்நாடகாவில் கனமழை: மண் சரிவில் சிக்கி 3 பேர் பரிதாப பலி
மத்தியப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 3 பேர் பலி
டாக்டரை கரம் பிடித்தார்; பஞ்சாப் முதல்வர் திருமணம் எளிமையாக நடந்தது: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், நெருங்கிய உறவினர்கள் பங்கேற்பு
உதய்பூரில் நுபுர் சர்மாவை ஆதரித்ததால் கொலை செய்யப்பட்ட டெய்லரின் மகன்களுக்கு அரசு வேலை: ராஜஸ்தான் அரசு முடிவு
திருப்பதி 2-வது மலைப்பாதையில் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு; பக்தர்கள் அவதி
ஆச்சரியம்..!: அமெரிக்காவில் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய வானம்..!!
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..