செக் மோசடியை விசாரிக்க 5 மாநிலங்களில் நீதிமன்றம்
2022-05-20@ 00:56:13

புதுடெல்லி: டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இருக்கும் செக் மோசடி வழக்குகளை விசாரிக்க, விரைவில் விரைவு நீதிமன்றங்களை அமைக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செக் மோசடி தொடர்பான வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி ஒரு தகவலை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதில், ‘மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் செக் பவுன்ஸ் உள்ளிட்ட மோசடி தொடர்பான வழக்குகள் அதிகப்படியாக நிலுவையில் இருக்கின்றன. இதனை தீர்த்து வைப்பதற்கு சிறப்பு மாஜிஸ்திட்ரேட் நீதிமன்றங்களை வேண்டுமானால் அமைக்கலாம்,’ என தெரிவித்தார். பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதில், ‘டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேச மாநிலங்களில் செக் மோசடி வழக்குகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்ட விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த நீதிமன்றங்கள் அனைத்தும் இயங்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் இந்த தீர்ப்பு தொடர்பான விவரங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட ஐந்து மாநில உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிக்கு தெரிவிக்க வேண்டும்,’ என உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகள்
அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான பேச்சு: கேரள மாஜி அமைச்சர் மீது வழக்கு
கர்நாடகாவில் கனமழை: மண் சரிவில் சிக்கி 3 பேர் பரிதாப பலி
மத்தியப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 3 பேர் பலி
டாக்டரை கரம் பிடித்தார்; பஞ்சாப் முதல்வர் திருமணம் எளிமையாக நடந்தது: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், நெருங்கிய உறவினர்கள் பங்கேற்பு
உதய்பூரில் நுபுர் சர்மாவை ஆதரித்ததால் கொலை செய்யப்பட்ட டெய்லரின் மகன்களுக்கு அரசு வேலை: ராஜஸ்தான் அரசு முடிவு
திருப்பதி 2-வது மலைப்பாதையில் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு; பக்தர்கள் அவதி
ஆச்சரியம்..!: அமெரிக்காவில் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய வானம்..!!
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..