முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: திருநெல்வேலி வாலிபர் கைது
2022-05-20@ 00:25:34

சென்னை:சென்னை காவல்துறை மாநில கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை நண்பகல் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் இன்னும் சற்று நேரத்தில் சென்னை விமான நிலையம், தமிழக முதல்வர் வீட்டில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதுகுறித்து கட்டுப்பாட்டு அறையில் உள்ள போலீசார் சென்னை விமான நிலையம் மற்றும் தேனாம் பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி போலீசார் தமிழக முதல்வர் வீடுகளில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.
அதேபோல் விமான நிலையத்திலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் எந்த வெடி குண்டும் சிக்கவில்லை. இதனால் இது வெறும் புரளி என தெரியவந்தது. பின்னர் சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அழைப்பு வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அதில், திருநெல்வேலி மாவட்டம் சுந்தமல்லி கிராமத்தை சேர்ந்த தாமரைக்கண்ணன்(25) என்பவர், கஞ்சா போதைக்கு அடிமையான அவர், போதையில் விளையாட்டாக வெடி குண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனே தேனாம் பேட்டை போலீசார், திருநெல்வேலி போலீசார் உதவியுடன் தாமரைக்கண்ணனை கைது செய்தனர். பின்னர் சென்னைக்கு அழைத்து வந்துஅவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தகுதியற்ற, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது : ஐகோர்ட் அதிரடி
சென்னையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது... நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜூலை 4ல் விசாரணை: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!!
மின் விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுங்கள்... பொறியாளர்கள், ஊழியர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவு!!
சொத்துக்காக தொழிலதிபரை கடத்திய வழக்கு போலீஸ் உதவி கமிஷனருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு
விஐடி குழும இன்டர்நேஷனல் பள்ளி திறப்பு விழா: தாய்மொழியில் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும்: துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேச்சு
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!