வேகப்பந்து
2022-05-20@ 00:24:51

புதிய பாகிஸ்தான் என்ற முழக்கத்தோடு ஆட்சியை பிடித்த இம்ரான் கான், ஏகப்பட்ட வாக்குறுதிகள் மக்களுக்கு அளித்து சிக்ஸராக அடித்து வந்தார். ஆனால் எந்த வாக்குறுதிகளையும் இவர் நிறைவேற்றவில்லை. மாறாக பொருளாதார நெருக்கடிக்கு பாகிஸ்தான் ஆளானது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். பின்னர் இம்ரான் கான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் தனக்கு எதிராக அமெரிக்காவின் சதி உள்ளது என்று இம்ரான் கான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட பிறகு பல்வேறு இடங்களில் கட்சி பொதுக்கூட்டங்களை கூட்டி தன்னை கொல்ல சதி நடப்பதாகவும், தான் பிரதமர் பதவி இழந்ததற்கு அமெரிக்காவின் சதியே காரணம் என்றும் வேகப்பந்து வீசி வருகிறார். வெளிநாட்டு சதி குறித்து விசாரணை நடத்த வேண்டும். பாகிஸ்தானில் விரைந்து பொதுதேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் இம்ரான் கான் புதிய குண்டையும் வீசியுள்ளார். அதாவது நான் ஒரு வீடியோ எடுத்து வைத்துள்ளேன். அதிகாரபலம் மிக்க குற்றவாளிகளை நம்முடைய நீதித்துறை ஒன்றும் செய்துவிட முடியாது. அதனால் மக்களுக்கே அதனை விட்டு விடுகிறேன். எனக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால் எனக்கான நீதியை இந்த நாடு பெற்றுத்தர வேண்டும்.
தொண்டர்களாகிய நீங்கள் அதை செய்ய வேண்டும் என்று ஆவேசமாக பேசிய அவர், எனக்கு ஏதேனும் நடந்துவிட்டால் வீடியோவில் குறிப்பிட்டுள்ள பெயரை கொண்ட நபர்களுக்கு எதிராக போராடி நீதிமன்றத்தின் முன் நிறுத்துவோம் என்று உறுதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அமெரிக்காவின் சதியால் தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டது என்று வலியுறுத்தி வரும் இம்ரான்கான், தற்போது ஷெபாஸ் ஆட்சியில் தக்காளி, சிக்கன் கடுமையாக விலை உயர்ந்துள்ளது. இது பற்றி ஏன் ஊடகங்கள் பேச மறுக்கின்றன. ஏனெனில் பிரதமர் குடும்பத்தினர் அந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.
எனது ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டில் சதி நடந்துள்ளது. தற்போது என்னை கொல்லவும் சதி நடக்கிறது. ஷெபாஸ் அரசு ஒரு இறக்குமதி செய்யப்பட்ட அரசு என்பதை திட்டவட்டமாக என்னால் கூற முடியும் என்று யாரும் தடுக்க முடியாத அளவுக்கு இம்ரான் கான் விமர்சனம் எனும் வேகப்பந்து வீசி வருகிறார். ஆனால் இவரது குற்றச்சாட்டை அமெரிக்கா ஏற்கனவே மறுத்துவிட்ட நிலையில், இவரது பேச்சை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. ஆனால் ஏதோ முக்கிய வீடியோ இருப்பதாக கூறுகிறாரே அது என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் மட்டும் அரசியல் கட்சித்தலைவர்களுக்கு மட்டுமல்ல பாகிஸ்தான் மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தொடரும் அதிரடி
பெருமையான தருணம்
புதிய போர் தந்திரம்
தொழில்துறையில் அபாரம்
திடீர் போர்க்கொடி
தாய்மொழியை நேசிப்போம்
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!