சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் பகுதியில் விதை ஆய்வு குழுவினர் திடீர் சோதனை
2022-05-19@ 20:55:08

சேத்தியாத்தோப்பு: கடலூர் மாவட்டத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் விதைகள் விற்பனை செய்யபடுவதாக விதை ஆய்வு குழுவிற்கு புகார்கள் வந்ததையடுத்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்பேரில் வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர்கள் சோமு, சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனர். அப்போது விதை ஆய்வாளர்கள் முருகன், நடராஜன், கவுதமி, சுமதி, தமிழ்வேல், செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இதனையடுத்து பரங்கிப்பேட்டை, அண்ணாகிராமம், புவனகிரி, பண்ருட்டி, விருத்தாசலம், கம்மாபுரம், உள்ளிட்ட வட்டாரங்களில் உள்ள அரசு வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதைவிற்பனை நிலையங்கள் மற்றும் விதை சுத்திகரிப்பு மையங்களில் ஆய்வு செய்தனர். தனியார் விதை விற்பனை நிலையங்களை ஆய்வு செய்தபோது அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த குறுவைப்பட்ட நெல் ரகமான எ.டி.டீ-43, எ.டி.டீ.-45, ஐ.ஆர்-50, ஏ.எஸ்.டி.- 16, கோ- 51, மானாவரி பட்டத்திற்கான வீரிய ஒட்டு கம்பு ரகங்களான 86 எம்- 38, அங்குர் 045, நித்ய விகாஸ், நித்யகுரு, கிருஷ்ணா, கணேஷ் போன்ற விதை குவியல்களின் தரத்தினை அறிய 46 விதை மாதிரிகள் எடுத்து கடலூர் விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தனியார் விதை விற்பனை நிலையங்களில் நெல், வீரிய ஒட்டுகம்பு, மக்காசோளம் விதைக்குவியல் 4.1 லட்சம் மதிப்புடைய 2.1 டன் விதைகளின் ஆவணங்கள் இல்லாததது கண்டறியப்பட்டது. அவற்றை விற்பனை செய்ய தடைவிதித்து, விதை சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்தனர். பின்னர் நெல் விதைக்கும் முன்பு 24 மணிநேரம் தண்ணீரில் நன்கு ஊறவைத்து 12 மணி நேரம் நிழல்சார்ந்த இடத்தில் சாக்கில் குவித்து மூன்றாம் கொம்பு முளைக்கும்போது, மாலையில் நாற்றங்காலில் சீரான தண்ணீரை தேக்கி விதைக்க வேண்டும் என்று விவசாயிகளிடம் எடுத்து கூறினர்.
மேலும் செய்திகள்
பட்டதாரி பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு மாஜி எம்எல்ஏவின் மகனுக்கு போலீஸ் வலை
கரூர் திருமாநிலையூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள தனிவிமானம் மூலம் திருச்சி புறப்பட்டார் முதல்வர் முக.ஸ்டாலின்
சாத்தான்குளம் அருகே விஷம் வைத்து 20 கோழிகள் சாகடிப்பு
பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து திருவேங்கடத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
ராஜபாளையம் தொகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
காட்பாடியில் சீரமைப்பு பணி முடிந்தது ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து தொடக்கம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்