SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து கள்ளக்காதலி கழுத்து நெரித்துக் கொலை : கேரளாவில் ஓட்டல் அறையில் பரபரப்பு

2022-05-19@ 16:58:39

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரில் ஓட்டல் அறையில் கள்ளக்காதலியை அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து கழுத்தை நெரித்துக் கொன்று வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரஸ்மா (31). கணவரை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது 6 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் பாலக்காட்டைச் சேர்ந்த கிரிதாஸ் (39) என்பவருடன் ரஸ்மாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. கிரிதாஸ் ரஸ்மாவின் அண்ணனின் நண்பர் ஆவார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. 2 பேரும் அடிக்கடி பல்வேறு இடங்களில் ரகசியமாக சந்தித்து வந்துள்ளனர்.

இதற்கிடையே 2 பேரும் திருமணம் செய்ய தீர்மானித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கள்ளக்காதலர்கள் திருச்சூரில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளனர். ஆனால் நேற்று பகல் முழுவதும் அவர்கள் தங்கி இருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது கிரிதாஸ் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார்.
ரஸ்மா கட்டிலில் இறந்து கிடந்தார். இதுகுறித்து திருச்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். அதைத் தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதலில் 2 பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதினர். ஆனால் தீவிர விசாரணையில் ரஸ்மாவுக்கு, கிரிதாஸ் அதிக அளவு மது கொடுத்து பின்னர் அவரை கழுத்தை நெரித்துக் கொன்றது தெரியவந்தது. ரஸ்மா இறந்ததை உறுதி செய்த பிறகு கிரிதாஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். 2 பேரும் திருமணம் செய்ய தீர்மானத்திருந்தபோதிலும் ரஸ்மா திருமணத்திற்கு மறுத்து விடுவாரோ? என்ற சந்தேகத்தின் பேரில் அவரை கிரிதாஸ் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

 • pondi-scl-23

  புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

 • admk-23

  50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

 • Goat_Pakistan

  பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்